தேர்வு அட்டவணையில் சொதப்பல்: மாணவ, மாணவியர் கடும் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2014

தேர்வு அட்டவணையில் சொதப்பல்: மாணவ, மாணவியர் கடும் அதிர்ச்சி

இரண்டாம் இடைப்பருவ தேர்வு அட்டவணை திடீரென மாற்றப்பட்ட தகவல், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படாததால், நேற்று தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.


அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் இடைப்பருவ தேர்வு நேற்று துவங்கியது. இதற்கான அட்டவணை, சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது. இதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று காலை, தமிழ்; மதியம், ஆங்கிலம் தேர்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக, புதிய தேர்வு அட்டவணை, கல்வி துறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புதிய அட்டவணையில், நேற்று காலை, இயற்பியல்; மதியம், தமிழ் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை செயல்பட்ட பள்ளிகளில் மட்டும், புதிய அட்டவணை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை செயல்படாத பள்ளிகளில், புதிய அட்டவணை குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க இயலவில்லை. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின், நேற்று காலை, தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, தமிழ் தேர்வுக்கு பதிலாக இயற்பியல் தேர்வு நடத்தப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்; தேர்வு எழுதவும் திணறினர். புதிய அட்டவணைபடி, இன்று காலை, ஆங்கிலமும், மாலை, வேதியியல் தேர்வும் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி