பகுதிநேர ஆசிரியர் சம்பளம்:ரூ.7,000 ஆக உயர்த்தி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2014

பகுதிநேர ஆசிரியர் சம்பளம்:ரூ.7,000 ஆக உயர்த்தி உத்தரவு

பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 7,000 ரூபாயாக, உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், கடந்த, 2011ல், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், உடற்பயிற்சி, இசை ஆகியவற்றிற்கு, 16,549 பகுதி நேர ஆசிரியர், 5,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.குறைந்த சம்பளம், நீண்டதுார பயணம் உள்ளிட்ட பிரச்னைகளால், 2,000த்திற்கும் மேற்பட்டோர், ராஜினாமா செய்து விட்டனர். 2,000 பணியிடம், காலியாக உள்ளது. தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டுமே, பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கான சம்பளத்தை, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அமலுக்கு வரவில்லை.இதுகுறித்து, சில நாட்களுக்கு முன், அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும், கல்வித்துறை செயலர், சபிதாவிடம், கோரிக்கை மனு கொடுத்தனர்.அதையடுத்து, சபிதா வெளியிட்ட உத்தரவில், 'அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும், கடந்த ஏப்., முதல், 7,000 ரூபாய் சம்பளம் என கணக்கிட்டு, நிலுவை தொகையுடன் வழங்கப்படும்' என தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. Dear brother, congrats for your fire. This is lead to permanent job also. This like that the 652 VOCATIONAL COMPUTER INSTRUCTOR is only allotted for Aided school vocational computer teachers. BUT LATERAL ENTRY B.ED CANDIDATE WANT TO TAKE THAT PLACE. WE ALSO WAITING FOR IT, THE REMAINING POST MAY GO TO B.ED CANDIDATES. Because they all are working from 2000,....2005...2008.....2014-15 and also full time teaching and not teaching (data entry also). But that peoples are not get permanent salary up to date. YOUR TEEM IS THE ROLL MODEL OF THAT TEEM. WE MUST WIN THAT PRAY. GOD WITH US.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி