விரக்தியின் உச்சத்தில் பகுதிநேர (சிறப்பு ?) ஆசிரியர்கள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2014

விரக்தியின் உச்சத்தில் பகுதிநேர (சிறப்பு ?) ஆசிரியர்கள்...


பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளாகியும் சேரும்போது எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையிலேயே இன்னும் இருக்கிறோம்.
எத்தனையோ கண்டனப் போராட்டங்கள்; எத்தனையோ ஆதரவுகள்; எத்தனையோ ஊர்வலங்கள்; கால மாற்றமோ காற்றினும் கடுகி விரைகின்றது. ஆனால் விடையென்னவோ சூனியம்தான் !...

பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் படைப்பாளிகள். படைப்பாளிகளுக்கே உரிய கர்வம், வர்க்க பேதமின்றி இருக்கத்தான் செய்யும். குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் பார்த்தாலும்கூட ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்திசெய்ய வேண்டியது அரசின் கடமை. படைப்பாளிகளுக்கு கொடையில்லை என்றாலும் பரவாயில்லை. பாடை கட்டி படையல் போட்டு விடுவார்களோ ?.

நாட்டின் கடைநிலை ஊழியனின் ஊதியத்தை விட மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட தடைபோடுவது எவ்விதத்தில் நியாயம் ?மேலும், மத்திய அரசினால் வழங்கப்பட்ட ஊதிய உயர்வினையும் அமல்படுத்தாதது ஏன் ?சுற்றமும், நட்பும் தித்திக்கும் தீபாவளி கொண்டாட, நாங்கள் கறுப்பு தீபாவளிகளில் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அரசினர், தனியார், வணிகர், நாள்கூலி என அனைவருக்கும் சம்பளம், போனஸ் என கிடைக்கிறது. இவை அனைத்தினின்றும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.

இந்த அரசினால் நியமனம் செய்யப்பட்ட எங்களை மட்டும்இந்த அரசு கண்டு கொள்ளாதது ஏன்?இத்தனைக்கும் நாங்கள் ஆசிரியர் என்ற நிலைக்கும் கீழிறங்கி ஆளும்கட்சி அரசியலுக்கு தலைவணங்கினோம்.

இப்பொழுது ?...

இனிமேல் ? ...

பொன். சங்கர்
திருப்பூர்.

10 comments:

  1. படைப்பாளிகள்? உடற்கல்வி ஆசிரியர்களைத் தவிர உரிய கல்வித்தகுதி பெரும்பாளானவர்களிடம் இல்லை., நியமனத்தில் பதிவு மூப்பு எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை... மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே வேலை, நீங்கள் படைப்பாளிகள் எஎன்றால், உண்மையான படைப்பாளிகளுக்கு என்ன பெயர்?

    ReplyDelete
    Replies
    1. திரு. பிர வீண்., தாங்கள் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியரா ? அல்லது பகுதிநேர ஆசிரியர் சாராத முழுநேர படைப்பாளியா (???) எதை வைத்து உடற்கல்வி ஆசிரியர்களைத் தவிர உரிய கல்வித்தகுதி பெரும்பாலானவர்களிடம் இல்லை என்று கூறுகிறீர்கள் ? " பெரும்பாளானவர்களிடம் " என்று தட்டச்சு செய்யும்போதே உங்கள் கல்வித்தகுதி !!! அனைவருக்கும் தெரிகிறது.

      மாதத்தில் 6 நாட்கள் மட்டும் வேலை அல்ல. மாதம் 12 அரை நாட்கள். மீதமுள்ள நாட்களுக்கு மட்டும் யார் வேலை கொடுப்பர் ? பணி பற்றிய ஒரு வரையறை இல்லாமலேயே ஏதோ கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு எவ்வளவு நாட்களை ஓட்டுவது ? எங்களில் பலர் 40 வயதினைக் கடந்தவர்கள். எங்களுக்கு மேலும், கீழும் உள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அரசின் பலன்கள் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது எங்களை மட்டும் இந்த அரசு கண்டுகொள்ளாதது ஏன் ? நிச்சயமில்லாத வெறும் 5000 த்தை வைத்து தண்டனைக் காலம் போன்று 3 ஆண்டுகள் கழித்து விட்டோம். இனிமேலும் என்ன செய்யப் போகிறோம் என்று வலியில் கதறிக் கொண்டிருக்கும் எங்கள் எரியும் வீடுகளில் எண்ணையை ஊற்றி அதில் குளிர்காயும் உங்களைப் போன்ற ஜீவன்களும் இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அப்படி என்ன எங்கள் மீது துவேசம் ?

      கோடிகளில் ஊழல் செய்தவர்களும், எங்கள் அப்பாவித்தனத்தில் கொழித்தவர்களும் சுகமாக இருக்கும் அரசியல்வாதிகளே. அந்த ஆளும் அரசியல்வாதிகளை நம்பி அழும் ஊமைகளாய் அப்பாவி அடிமைகளாய் நாங்கள்... எங்கள் பலவீனக் குரல் எட்டுமா ஏசியில் சயனிக்கும் அவர்களை ?

      நீங்கள் இந்த ஊனப் பதவிக்கு ஆசைப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் என்பதையும் நாம் அறிவோம் !

      நீங்கள் பொறாமைப் பட வேண்டியது எங்களைப் பார்த்து அல்ல. அவர்களைப் பார்த்து...


      பொன். சங்கர்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. போற்றுவார் போற்றட்டும்... தூற்றுவார் தூற்றட்டும்..

      எருதின் புண் காக்கைக்கு தெரியாதென்பதை உணராதவரா தாங்கள் ?

      தனக்கு வாய்ப்பில்லை என்றால் பிறர் வாய்ப்பை தட்டிவிடுவோரல்லர் நாம்.

      நேர்முகத்தேர்வின் மூலம் உரிய முறையில் தேர்வான நாம், அரசையும், சட்டங்களையும், கல்வித்துறையையும் மதித்து காந்திய வழியில் போராடும் நிலையில், இவ்விமர்சனங்கள் உரமாகும்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Excellent...you people knew about the rules and conditions before appointment itself.. just answer this.. how many part time computer instructors are with B.SC computer science +B.ed.. how many students from the school were transformed into artists by your so called படைப்பாளிகள்? I am not a part time teacher.. there is no need for me to think jealous of u.. Did employment seniority properly followed in your appointment? Most of you got appointment by giving money.. those who got the appointment by giving money don't have the right to speak about human rights... little spelling mistakes while typing in a mobile phone can't judge one's education and quality.. mind it...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நாங்களும் ஆசிரியர்கள்தான் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம் எங்களின் திறமைகள் பகுதிநேர அரை
    நாட்களில் கட்டப்பட்டுள்ளது, எங்களுக்கும் இந்த ஆசிரியர் சமுதாயத்தில் முழுநேர அந்தஸ்தை கொடுத்து பாருங்கள், மாணவர்களிடம் உள்ள படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்து
    பல கலைஞர்களை உருவாக்கி காட்டுகிறோம்.. மூன்றாண்டுகள்
    கடந்த நிலையில் நாளை பொழுது நன்றாய் விடியும் என்று அழத்தெரியாத ஊமைகளாய் இந்த் அப்பாவி சிறப்பாசிரியர்கள் ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி