முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகைக்கு விரைவில் புதிய முறை: பள்ளிக்கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகைக்கு விரைவில் புதிய முறை: பள்ளிக்கல்வித்துறை முடிவு


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க விரைவில் புதிய முறையைக் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படு கிறது. இவ்வாறு ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிக பட்சம் 2ஊக்க ஊதியங்கள் பெறலாம்.அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்எட் பட்டம் பெற்றிருந்தால் அதற்கு ஓர் ஊக்க ஊதியமும், எம்பில், பிஎச்டி, பிஜிடிடிஇ (ஆங்கில பயிற்சியில் முதுகலை பட்டயம்)-இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு இன்னொரு ஊக்க ஊதியமும் பெறத் தகுதியுடையவர் ஆவர்.நேரடியாக முதுகலை பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேரு வோர் தொலைதூரக்கல்வி மூலம்எம்எட் முடித்துவிட்டு முதல் ஊக்க ஊதியத்தைப் பெற்றுவிடுவர்.

தற்போது தொலைதூரக்கல்வி மூலம் எம்எட் படிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்துவிட்டது. ஒரு சில பல்கலைக்கழகங்களே அதுவும் குறைந்த நபர்களையே எம்எட்படிப்புக்கு சேர்க்கின்றன. இந்த சூழ்நிலையில், அவர் களுக்கு 2 ஊக்க ஊதியங்கள் வழங்குவதற்கு எம்பில், பிஎச்டி, பிஜிடிடிஇ படிப்புகள்-இவற்றி லேயே இரு படிப்புகளை கணக் கில்கொள்ள பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.இதைத்தொடர்ந்து, மேற் கண்ட கல்வித்தகுதிகள் உடைய முதுகலை பட்டதாரி ஆசிரியர் களின் பட்டியலை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித் துள்ளார்.

இந்த புதிய நடைமுறை குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் கூறும்போது, “தமிழகத்தில் 22ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார் கள். அவர்களில் 16 ஆயிரம் பேர் நேரடியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள்.எம்பில், பிஎச்டி முடித்தவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள். எனவே, அரசின் புதிய முறையால் பயன் என்று பார்த்தால் அதிகம் இருக்காது” என்றார்.நேரடியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவோர் தொலைதூரக்கல்வி மூலம் எம்எட் முடித்துவிட்டு முதல் ஊக்க ஊதியத்தைப் பெற்றுவிடுவர்.

21 comments:

  1. Replies
    1. நண்பர்களுக்கு காலை வணக்கம்.... ராமர் வழக்கு நாளைய பட்டியலில் 48 ஆவது எண்ணாக இடம் பெற்றுள்ளது...
      நாள்: 05/11/14
      வழக்கு எண்; 16547
      கோர்ட் எண் : 12
      வரிசை எண்: 48
      நீதிபதி: மாண்புமிகு.டி.ராஜா

      நல்லதே நடக்கும்... அவை அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.....

      Delete
  2. Minority language counselling date announce senjitangala thanveer bhai.pls inform

    ReplyDelete
  3. Adi sir I am selected in adw schools with 5% relxn(89).ippadi enga gamelan eduthiduvangala.pls sollungapa.

    ReplyDelete
  4. Adi sir I am selected in adw school with 5% relxn(89).ippa enga namelam andha listla irundhu eduthiduvangala sir.

    ReplyDelete
  5. கண்டிப்பாக நீக்க முடியாது
    தாங்கள் விரைவில் ஆசிரியராக வாழ்த்துக்கள்
    தமிழக அரசு 5% சலுகையை ஆதரிக்கிறது
    உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே ஆதரவாக தீர்பளித்துள்ளது

    அரசியல் காரணங்களுக்காக,தேர்தலை மையப்படுத்தி,முன் தேதியிட்டு
    அறிவிக்கப்பட்டது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே ஜி ஓ 25 க்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது
    மற்றபடி ஒன்மில்லை.
    இது தமிழக அரசுக்கு சாதகமாகத்தான் முடியும்.கவலை வேண்டாம்.
    விரைவில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது

    ReplyDelete
  6. Thank you sir.thanks a lot.unga words oru confidencea koduthiruku.

    ReplyDelete
  7. ஜி.ஒ 25 ஆல் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பயன் பெறுவதால் அதை தடை செய்யமாட்டார்கள்.அதே சமயம் பணியில் உள்ளவர்களையும் நீக்கம் செய்வதற்கு வாய்ப்பில்லை

    ReplyDelete
  8. ஆதிதிராவிடன் சார் mohetha tejesh நு ஒருவர் adw ல promotion panel ரெடி ஆகிடு இருக்கு so அது முடிஞ்சா தான் list வரும் நு பீதிய கிளப்பறார் .அவர் சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது சொல்லுங்கள் சார் .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.
      பதவி உயர்விற்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது

      இதில் ஆரம்ப,நடுநிலை,உயர்நிலை,மேநிலை ஆதி நலப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறவுள்ளது

      ஜனவரி மாதம் நடைபெறலாம் என பரவலாக பேசப்படுவது உண்மைதான்.

      அவ்வளவு நாட்கள் பணிநியமனம் தள்ளி போகாது
      தற்போது நிரப்பப்பட போவது,1-8 வகுப்புவரை என்பதால் எந்த பிரட்சனையும்
      இருக்காது நண்பேரே
      இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப பள்ளி நிலையில் அதிக காலியிடங்கள் ஏற்டும்

      Delete
  9. adhi anna unga varthaigal migavum manathuku aarthalaga eruku

    ReplyDelete
  10. adhi anna paper 1 ku next list yeppo varum anna

    ReplyDelete
  11. 2011 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆதி நலப் பள்ளிகளில் 1045 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டது.அதில் 669 இடங்கள் இடைநிலை ஆசிரியர்கள்.இதற்கான நோட்டிஃபிகேஷன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ராமர் சுடலை வழக்கால் தேர்வுப்பட்டியல் இன்னும் வௌியிடப்படவில்லை.

    2012, 2013 ,2014 ம் ஆண்டிற்கன காலியிட அறிக்கை கணக்கிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே அடுத்த லிஸ்ட் நோட்டிஃபிகேஷன் வௌிவரும் சகோதரியே

    ReplyDelete
  12. ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012 - just published by TRB

    ReplyDelete
  13. Go 71 Ku edhirana case al ippo job sendhavanglku prblm varma sir reply aadhi sir

    ReplyDelete
  14. நண்பர்களுக்கு காலை வணக்கம்.... ராமர் வழக்கு நாளைய பட்டியலில் 48 ஆவது எண்ணாக இடம் பெற்றுள்ளது...
    நாள்: 05/11/14
    வழக்கு எண்; 16547
    கோர்ட் எண் : 12
    வரிசை எண்: 48
    நீதிபதி: மாண்புமிகு.டி.ராஜா

    நல்லதே நடக்கும்... அவை அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.....

    ReplyDelete
  15. pg teacher regularisation order for 2012 appointment when will come from director office

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி