மூளைச்சாவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2014

மூளைச்சாவு

இன்று அடிக்கடி நாம் பார்க்கும் செய்திகளில் ஒன்று, "மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள், தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டு, பலர் வாழ்வு பெற்றனர்!" என்பதுதான்.


ஒரு மருத்துவ தம்பதியின் இளம் வயது மகன் மூளைச்சாவு அடைந்தபோது, அவனது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அப்போது முதல், இந்த மூளைச்சாவு உறுப்புதானம் மிகவும் பிரபலம் அடைந்தது. தற்போது, அன்றாட செய்திகளில் அடிபடும் விஷயமாக அது மாறிவிட்டது.

மேலோட்டமாக மட்டுமே பார்த்தால், இது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாக இருக்கலாம். ஆனால், இதே சம்பவம் அடிக்கடி நடக்கிறதே? அதுதான் நம் யோசனையை கிளறுகிறது. முன்பெல்லாம் விழிப்புணர்வு இல்லை, இப்போது விழிப்புணர்வு அதிகரித்து விட்டது என்று எளிதாக சொல்லலாம்.

கால அவகாசம்

ஆனால், நமக்கு ஒரு விஷயம் நெருடுகிறது. ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டால், அவர் மீண்டு வருவதற்கு சிறிதுகால அவகாசம் கொடுக்கலாமே! பலர் இதுபோன்று மீண்டு வந்த உதாரணங்கள் உள்ளன. சிலர் சில நாட்களிலோ, சிலர் சில மாதங்களிலோ, ஏன், சிலர் சில ஆண்டுகள்கூட எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதையெல்லாம் யோசிக்கலாமே...

மூளைச்சாவிலிருந்து ஒருவர் மீளும் வரை, அவரை சார்ந்த உறவினர்கள் படும்பாடு அதிகம்தான். ஆனால், சம்பந்தப்பட்ட நபர், இழக்க முடியாத நபராக இருப்பார். குழந்தையில்லாத மனைவியின் கணவராக இருக்கலாம்; விதவைத் தாயின் ஒரே பிள்ளையாக இருக்கலாம்; பல பேரைக் காப்பாற்றும் ஒரு குடும்பத் தலைவராக இருக்கலாம்; ஒரு நல்ல மனித ஆற்றலாக இருக்கலாம்; ஒரு இளம் மனைவியின் பிரியமிகு கணவராகவோ, இளம் கணவரின் பிரியமிகு மனைவியாகவோ இருக்கலாம்.

எனவே, இதையெல்லாம் மறந்துவிட்டு, மூளைச்சாவு என்ற நிலைக்கு சென்றவுடன், உடனே, உடல் உறுப்பு தானம் என்பதைப் பற்றி ஏன் யோசிக்க வேண்டும்? மீண்டுவர வாய்ப்புத் தரலாமே...

மறைமுக வணிகமா?

அனைத்துமே வணிகமாக இருக்கும் இந்த உலகில், உடல் உறுப்பு தானம் என்பதற்குப் பின்னாலும் வணிக நலன்கள் ஒளிந்திருக்கிறதோ? என்று நமக்கு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடிவதில்லை. மருத்துவர்களுக்கு ஏன் இந்த அவசரம்?

அதுவும், ஆதிமுதல் அந்தம் வரை, அனைத்துமே கார்பரேட் தனமாகவே மாறிவிட்ட அலோபதி மருத்துவத்தில், அவசரப்பட்டு ஒருவரை சாகடித்து, உடல் உறுப்புகளை எடுத்து வியாபாரம் செய்து விடுகின்றனரா? என்ற வலுவான ஐயம் எழுகிறதுமேலும் வணிக நலன்களுக்காக சிலர் செயற்கையாகவே மூளைச் சாவு அடைய வைக்கப்படுகிறார்களோ? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இன்றைய நிலையில், மருத்தும் என்பது (குறிப்பாக அலோபதி மருத்துவம் - English medicine) ஒரு வியாபாரம் என்பதாகவே மாறிவிட்டது. எனவே, சம்பந்தப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் சற்று விழிப்புடன் இருப்பதே நல்லது.


19 comments:

 1. unkalin karuthu mikavum payanullathu surulivel brother

  anal unkalin santhekam venanathu


  ReplyDelete
  Replies
  1. இதுபோன்று ரத்ததானம் குறித்தும் விழிப்புணர்வு உள்ளது. ஆனால் மருது்துவர்கள் யாரும் ரத்தம் தானம் செய்வதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

   Delete
 2. இதுவரை மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் ஏழைகளுக்கோ அரசு மருத்துவமனையில் உள்ள நலிவடைந்த மக்களுக்கோ பொருத்தப்பட்டதாக தகவல் இல்லை.

  ReplyDelete
 3. Tholvi unnai thuratthugirathu endraal.......Nee Vetriyai nerungivittai endru arttham.....

  ReplyDelete
 4. Agilan sir photo la iruppathu unga thambiya?

  ReplyDelete
 5. Vetri namathu thalaiyai alangarikkum endraal...........Tholvi namathu kaalgalai balappadutthum..........

  ReplyDelete
  Replies
  1. Vetrium tholvium vazhvin angam but 2013 tet passed candidates ku vetriyin vasal yedhuvenre theriyavillai nanbargale???

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 6. எனதருமை நண்பர்களுக்கு வணக்கம்,,,,,,,,,,,,,,
  பொருத்தார் வாழ்வார் நலமாக,,,,,,,,,,,,,,
  விரைவில் நலம் தொடரும்,,,,,,,,,

  ReplyDelete
 7. சாதனை படைக்க சோதனை தேவையில்லை,,,,, ஆனால் சரித்திரம் படைக்க பல சோதனைகளை நிச்சயம் கடக்கத்தான் வேண்டும்,,,,,,,
  எல்லாம் நலமாகும் விரைவில்,,,,,,,,,,,,,
  பொருத்திரு மனமே,,,,,,,,,,,,,

  ReplyDelete
 8. hai dear brothers & sisters & friends good evening

  mudivu theriyatha payanathil sendru kondiruntha nam tharpothu
  sariyana pathaiyil sendru kondirukkirom
  viraivil mudivai varavalaithu viduvom

  tharpothaiya nilai thodarathu marum

  ellam nanmaike

  thanks to alllllllllllllllllllllll

  ReplyDelete
 9. tnpsc english option free coaching vnr contect 9791322145

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் உங்கள் பயணம் இமயம் வரை. ..

   Delete
  2. வாழ்த்துகள் உங்கள் பயணம் இமயம் வரை. ..

   Delete
 10. Sir neenga etha mean panni solringa?

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. pg trb formla employment seniorty colomla date of registrationa mention paniten yearsa count pani podala so hall tiket enaku anupurathula prblm varuma reply panunga frnds

  ReplyDelete
 13. உங்கள் கருத்து மனதை நெருட வைக்கிறது . யோசிக்க வேண்டிய விஷயமிது. மேலான உங்கள் கருத்துக்கு வாசகர் சார்பில் நன்றி.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி