நாடு சிறிது; உலகம் பெரிது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2014

நாடு சிறிது; உலகம் பெரிது

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்திருப்பது, இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.


அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததைக் காரணம்காட்டி, இதுவரை ஆதரவு அளிப்பதற்கு தயங்கிவந்த அமெரிக்கா, இப்போது இறங்கி வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது, இந்த உறுதியை அமெரிக்க அதிபர் ஒபாமா தந்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இவை தவிர, நிரந்தரமல்லாதவையாக, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் 10 உறுப்பு நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
அப்படி, நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் அதில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகமாக உள்ளது.
இந்தியா தவிர, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய ஜி4 நாடுகளும் நிரந்தர உறுப்பு நாடுகளாக ஆவதற்குப் போட்டி போடுகின்றன.

இவை ஒன்றுக்கொன்று ஆதரவு தெரிவித்துக் கொண்டாலும், தற்போதைய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவையும் பெற்ற ஒரே நாடு இந்தியாதான்.
ஐந்து நாடுகளில் சீனா தவிர மற்ற நான்கு நாடுகளும் நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சீனா மட்டும் ஒரு நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஜப்பானுக்கு அளித்து வரும் ஆதரவை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.

வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் ஆதரவு ஒருபுறம் இருக்க, இப்போதைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெறத் தகுதி படைத்த நாடுகளுள் முதன்மையானதாக இந்தியாவே சர்வதேச நாடுகளால் அடையாளம் காட்டப்படுகிறது.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 2-ஆவது நாடு, மாபெரும் ஜனநாயக நாடு என்கிற பெருமையைவிட, ஐ.நா.வின் அமைதி முயற்சியில் இந்தியாவின் அளப்பரிய பங்களிப்பே இந்த ஆதரவுக்கு முக்கியக் காரணம்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1945-ஆம் ஆண்டு இணைந்த இந்தியா, நிரந்தரமல்லாத உறுப்பு நாடாக இதுவரை ஏழு முறை இருந்துள்ளது. கடைசியாக 2011-12-இல் இடம்பெற்றிருந்தது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு லட்சம் வீரர்கள் ஐ.நா.வின் அமைதிப் படையில் பணிபுரிந்துள்ளனர்.நிரந்தர உறுப்பு நாடுகளை கூடுதலாக்குவது, "வீட்டோ' அதிகாரப் பரவலாக்கம் என, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகியவை "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி, முக்கியமான பிரச்னைகளில் தாங்கள் நினைத்ததைச் சாதிக்கின்றன என்பது அந்நாடுகளின் குற்றச்சாட்டு.

ஈரானுக்கான ரஷியாவின் ஆதரவு, இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவு, ஜப்பான் மீதான சீனாவின் கோபம், திபெத், ஹாங்காங் மீதான அடக்குமுறை உள்ளிட்டவற்றில் இந்த மூன்று நாடுகளும் சுயலாபம் கருதிச் செயல்படுவதாக விமர்சனங்கள் தொடர்கின்றன.

இந்த பிரச்னைகளில் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பலமுறை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நாடுகள் முறியடித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஒருமுறை பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், "உலகம் ஐந்து நாடுகளையும்விடப் பெரியது' என்று குறிப்பிட்டார்.

வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து பெரியண்ணன்களும் தாங்கள் வைத்ததே சட்டம் என்று கடந்த காலங்களில் நடந்துகொண்டதால் ஏற்பட்ட ஆதங்கம் அது. இந்தச் சூழ்நிலையில்தான், இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இடம்பெறுமேயானால், அந்த அமைப்பு அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாகவும், வலுவானதாகவும் அமையும் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை.

13 comments:

  1. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி இடைநிலை ஆசிரியர் பட்டியல் ஏதாவதுதகவல் இருந்தால் தெரியபடுத்தவும்

    ReplyDelete
  2. Group4 kku 5th counling eppo yarukkathu detail therinthal sollungal

    ReplyDelete
  3. I am paper 1 nan MBC my weit 74.17% adw listla chance erukka?

    ReplyDelete
  4. 90 Ku kela mark eaturhu appionment anavarkaluku supreme court resuet la eethum problem vacua..Nan handicapped .....

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. No problem .matravargal solvathai kelaatheergal avai unmai illai.avargal pani vaaipu perathathaal avaaru kooralaam. Tn govt antha alavakku yaaraium kaayapaduthaathu.veen yosanaigal vendam. . naan above 90 . Aanalum enakku pani kidaikkavillai.nitchayam panivaaipu Petra anaivarum aasiriyaraaga thodarveergal.ithu unmai.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. I am spend 10 lakhs above to join aided school

    ReplyDelete
  9. இந்தியா விரைவில் வல்லரசாகும் என்ற உண்மையை ஐந்து பெரிய அண்ணன்களும் உணர்ந்துள்ளார்கள். உலக பொருளாதார தேக்க நிலையிலும் இந்தியா தத்தளிக்காமால் இருப்பதே இதற்க்கு ஒரு காரணம்

    ReplyDelete
  10. என்னுடைய புத்தகம் எனது வெற்றிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது இது எந்த கடையிலும் கிடைக்காது புத்தகம் முழுவதும் என்னுடைய உழைப்பு மட்டுமே இருக்கும் எனது தொடர்பு எண் 9976715765 தமிழ் வரலாறு புவியியல் குடிமையியல் பொருளியல்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி