ஜெ.,படம் அகற்ற வழக்கு-ஐகோர்ட் கிளை நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2014

ஜெ.,படம் அகற்ற வழக்கு-ஐகோர்ட் கிளை நோட்டீஸ்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களை அரசு அலுவலகங்களில் அகற்ற தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை வக்கீல்கள் சங்க இணைச் செயலாளர் கருணாநிதி தாக்கல் செய்த மனு:அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உட்பட 12 பேரின் படங்கள் இடம்பெறலாம். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் செப்.,27 ல் தண்டனை விதித்தது. அவர் எம்.எல்.ஏ.,பதவியை இழந்துவிட்டார். தண்டனை பெற்ற பின்னும், அரசு அலுவலகங்களில் அவரது படங்கள் அகற்றப்படவில்லை.

அரசு அலுவலகங்கள், திட்டங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுஇருந்தார்.நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன் மனு விசாரணைக்குவந்தது. மனுதாரர் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். மத்திய கேபினட் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி