தொடக்கபள்ளி மாணவர் எடை, உயரம் கணக்கெடுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2014

தொடக்கபள்ளி மாணவர் எடை, உயரம் கணக்கெடுப்பு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் வகையில், கல்விதகவல் மேலாண்மை முறையை, தமிழக தொடக்க கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்த அரசு உத்தரவு:

தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு உட்பட்ட, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், முதல் மற்றும், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் எடை, உயரம் சம்பந்தமான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள, அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வசதி இல்லாத பள்ளிகள், அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் உள்ள அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், விபரங்களை சேகரித்து, தொடக்க கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி