ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: பல்கலைக்கழகங்களுக்கு மானியக் குழு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2014

ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: பல்கலைக்கழகங்களுக்கு மானியக் குழு உத்தரவு


மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழகங்களும் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளும், வரும் கல்வியாண்டிற்குள் அனைத்து ஆசிரியர் காலியிடங்களையும் நிரப்பியிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
அதிக அளவில் காலியிடங்கள் இருக்கும் காரணத்தால் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டே அந்த இடங்கள் ஈடு செய்யப்பட்டு வருகிறது என்றும் இதனால் முழுமையான கற்பித்தல் முறை பாதிக்கப்படுவதாகவும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரந்தரப் பணியாளர்கள் கொண்டு வரும் கல்வியாண்டிற்குள் நிரப்பப்பட வேண்டும் எனவும் யு.ஜி.சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நிரப்பப்படும் பணியிடங்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பல்கலைக்கழகத்திற்கு பொது மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்படும் எனவும் அண்மையில் யு.ஜி.சி., அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி