சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழாவைபார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.
மாணவ,மாணவியர் மிகுந்த மகிழ்ச்சியுடன் புத்தக திருவிழாஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.புத்தக திருவிழாவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிசெல்கின்றனர்.நவம்பர் 9ம் தேதி வரை நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அறிவுப் பசியைப் போக்க அன்றாடம் மாலையில் தமிழ் சான்றோர்களின் சொற்பொழிவு மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஐந்து ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையிலான புத்தகங்கள் விற்பனையாகி கொண்டிருக்கின்றன.சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான தலைப்புகளில் தமிழ்,ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
கலை,அறிவியல்,கலாசாரம்,பண்பாடு,ஆன்மிகம்,ஓவியம்,அரசியல்,இலக்கியம்,கவிதைகள்,குழந்தைகள் விரும்பும் கதைப் புத்தகங்கள்,சமையல்,ஜோதிடம்,புராண இதிகாச வரலாற்றுக் கதைகள் என அணைத்து எழுத்தாளர்களின் அற்புதமான படிப்புகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன..
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி