நூலக வாரவிழாவினை முன்னிட்டு நடுநிலைப் பள்ளி மாணவர்களை களப்பயணமாக நுலகம் அழைத்து சென்று பொது நுலகம் அறிமுகம் செய்தல் நிகழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2014

நூலக வாரவிழாவினை முன்னிட்டு நடுநிலைப் பள்ளி மாணவர்களை களப்பயணமாக நுலகம் அழைத்து சென்று பொது நுலகம் அறிமுகம் செய்தல் நிகழ்ச்சி


தமிழ்நாடு அரசு பொது நூலக துறை சார்பாக நடைபெறும் நூலக வாரவிழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் கலப்பயணமாக தேவகோட்டை கிளை நுலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மாணவ,மாணவியர் சுற்றலா செல்வதுபோல் மகிழ்ச்சியுடன் நூலகதிற்க்குள் நுழைந்தனர்.இந்த மாணவ,மாணவியர்பொது நூலகத்திர்க்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவ,மாணவியரை நூலக தினக் கூலி பணியாளர் ராதா அன்புடன் வரவேற்றார்.நூலகத்தை முற்றிலுமாக சுற்றி காண்பித்தார்.நூலகம் எவ்வாறு செயல்படுகிறது ,என்ன,என்ன புத்தகங்கள் உள்ளன,நூலகத்தில் உறுப்பினராக எவ்வாறு சேருவது,உறுப்பினாராக என்ன,என்ன கொண்டு வரவேண்டும்,புத்தகத்தை எடுத்து செல்லும்போது எவ்வாறு பதிந்து கொள்வது,எத்தனை நாளுக்குள் புத்தகத்தை திரும்ப கொடுக்க வேண்டும்,புத்தகங்களை எவ்வாறு அடுக்கி வைப்பது,புத்தகங்களை எவ்வாறு எளிதாக எடுப்பது,என்பன போன்ற பல பயனுள்ள தகவல்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தார்.போட்டி தேர்வுக்கு உரிய புத்தகங்கள் இங்கு இருக்குமா ? என மாணவன் சூர்யா கேட்டார்.அதற்கு நூலக பணியாளர் ராதா அனைத்து போட்டி உரிய புத்தகங்களும் இங்கு உள்ளது என கூரினார்.

புத்தகத்தை தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.அதற்கு பணியாளர் புத்தகத்திற்கு உரிய தொகையை பணமாக செலுத்த வேண்டும் என பதில் கூரினார்.மாணவர் நடராஜன், எட்டாம் வகுப்பு படிக்கும் நாங்களும் நூலகதில் உறுப்பினர் ஆக முடியுமா என கேட்டார்? அதற்கு நூலகர் படிக்க தெரிந்த அனைவரும் உரிய ஆவணங்களை கொடுத்து உறுப்பினர் ஆகலாம் என கூரினார்.அனைத்து மாணவர்களையும் உறுப்பினாராக ஆலோசனை வழங்கப்பட்டது.புரவலர் நிதிதொடர்பாகவும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.மாணவர்கள் நூலகத்தில் ஆகப்புர்வமான வினாக்களை கேட்டு நூலகம் பற்றிய தெளிவான அறிவை பெற்றனர்.மாணவர்கள் அனைவரும் உறுப்பினர் ஆவதாகவும்,தொடர்ந்து போட்டிக்களுக்கு புத்தகங்களை எடுத்து பயன்படுத்த போவதாகவும் உறுதி எடுத்து கொண்டனர்.பொது நூலகம் தொடர்பாக புதிய தகவல்கள் பெற்றதாகவும் தெரிவித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஆசிரியைகள் முத்துலெட்சுமி,செல்வமீனாள் மாணவ,மாணவியருடன் சென்றனர்.

பட விளக்கம்:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தேவகோட்டை கிளை நூலகத்தில் நூலக பணியாளர் ராதா கூறுவதை ஆர்வமுடன் கவனிக்கின்றனர்.

Thanks & Regards,

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam School,
Devakottai.9786113160

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி