குழந்தைகள் தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2014

குழந்தைகள் தினம்


குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14, குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் பற்றி நேரு குறிப்பிட்ட போது, “குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்என்றார்.

குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். அவரது காலத்தில் அன்பு வைத்திருந்த குழந்தைகள் - இன்று பெரியவர்களாகி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடும் முக்கிய நிலையில் உள்ளனர். இவர்களது குழந்தைகளும், நேரு குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பை அறிந்து அவர் மீது பாசம் கொள்கின்றனர். நேரு மறைந்துவிட்ட போதும், காலம் காலமாக அவரது அன்பு குழந்தைகள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்கிறது.

குழந்தைகளுக்கு கடிதம் எழுதிய நேரு அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்
வயதானவர்கள் எப்போதும் இளையோரிடம் அறிவுரை கூறுவதைப் பார்த்திருக்கிறேன். சிறுவனாக இருந்த போது, நான் அதை விரும்பவும் இல்லை. எனவே நீங்களும் அறிவுரைகளை விரும்பமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். வளர வளர நாம் புத்திசாலியாக ஆகிறோம். ஆனால் ஒரு சிலரே, நல்ல ஞானம் பெற்றவர்களாக உருவாகிறார்கள். என்னுடைய மனதில், நான் புத்திசாலியா இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை.

நல்ல புத்திசாலியானவர்கள் தாங்கள் புத்திசாலி என்று பேசமாட்டார்கள். தாங்கள் பெரியவர்கள் என்று வெளிக்காட்டும் விதத்திலும் நடந்து கொள்ள மாட்டார்கள். நம்முடன் காந்தியடிகள் இருந்தார்கள். அவரை பாபுஜி என்று செல்லமாக அழைப்போம். அவர் மிகுந்த புத்திசாலியாக இருந்த போதும், அதை ஒரு போதும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். இவ்வாறு அவர் பாசத்துடன் குழந்தைகளுக்கு எழுதியிருந்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஜூன் முதல் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ம் ஆண்டில், நவம்பர் 20ம் தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக .நா., அறிவித்தது. எனினும் நவம்பர் 14ம் தேதிதான், இந்தியாவில் குழந்தைகள் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி