நியமன ஆணை எப்போது கிடைக்கும்? வனச்சரகராக தேர்வானவர்கள் விரக்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

நியமன ஆணை எப்போது கிடைக்கும்? வனச்சரகராக தேர்வானவர்கள் விரக்தி

தமிழகத்தில், நேரடியாக வனச்சரகர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் இன்றி, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழக வனத்துறையில், 25 ஆண்டு களாக, வனச்சரகர் பணிக்கு நேரடியாக யாரையும் தேர்வு செய்யவில்லை. பணி மூப்பு அடிப்படையில், வனவர்கள், வனச்சரகராக நியமிக்கப்பட்டனர். கடந்த, 2010ல், காலியாக உள்ள, 80 வனச்சரகர் பணியிடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடந்தது. இதில் தேர்வானவர்கள் பட்டியல், மூன்று மாதங்களுக்கு முன், வனத்துறையிடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்களாக, பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

இதுகுறித்து, விண்ணப்பதாரர் ஒருவர் கூறியதாவது:

தேர்வு முடிந்த நிலையில், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதிலும், எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. மருத்துவ தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இரண்டு மாதங்களாக, பணி நியமன ஆணைக்காக காத்திருக்கிறோம். சான்றிதழ் சரிபார்ப்பின் போது, வேறு பணியில் அல்லது படிப்பில் இருந்தால், 'ரிலீவிங்' ஆர்டர் தர வேண்டும் என, கேட்கப்பட்டது. இதற்காக, நாங்கள் ஏற்கனவே இருந்த பணியில் இருந்து விலகி விட்டோம். சிலர், படிப்பையும் பாதியில் விட்டுவிட்டனர். இந்தப் பணியும் தள்ளிப்போவதால், வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி