'முதல்வர் கணினி தமிழ் விருது' பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம், ’முதல்வர் கணினி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
விருது தொகை, 1லட்சம் ரூபாயுடன், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இவ்வகையில், 2014ம் ஆண்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போட்டிக்குரிய மென்பொருள்கள், 2011, 2012, 2013க்குள், தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, தமிழ் வளர்ச்சித் துறை வலை தளத்தில் ( www.tamilvalarchithurai.org ) இலவசமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்கத்திற்கு, டிச., 31ம் தேதிக்குள், ’தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413, ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி