அந்தமான் அருகே புதிய புயல் ‘அஷோபா’ உருவாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

அந்தமான் அருகே புதிய புயல் ‘அஷோபா’ உருவாகிறது.


அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து விசாகப்பட்டினத்தில் உள்ள புயல் எச்சரிக்கை மைய அதிகாரி கூறியதாவது:-

அந்தமான் அருகே புயல்

அந்தமான் அருகே வங்கக்கடலில் விசாகப்பட்டினத்தில் இருந்து 1400 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளன. அது வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புயலுக்கு ‘அஷோபா’ என்று பெயர் சூட்டப்படும்.இந்த பெயரை இலங்கை தேர்ந்து எடுத்து உள்ளது. இது ஒடிசா முதல் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வரை தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் அதன் வழியை. இப்போது கணிக்க முடியாத நிலை உள்ளது. 8 அல்லது 9-ந்தேதி புயலாக மாறும் என்று கணிக்க முடிகிறது.இதேபோல மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக்கடலில்இலங்கை அருகே உருவாகி உள்ளது.இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மழை இன்று எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று கூறியதாவது:-

இன்று சில இடங்களில் மழை

இலங்கை அருகே வானத்தில் காற்றில் மேலடுக்கில் சுழற்சி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று (புதன்கிழமை) தென் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.நேற்று காலை 8.30மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

ராதாபுரம் 6 செ.மீ., பாபநாசம் 5 செ.மீ., பேச்சிப்பாறை, மதுரை விமானநிலையம் தலா 4 செ.மீ., மதுரை தெற்கு ,ஆயிக்குடி, செங்கோட்டை, ராஜபாளையம் , நாங்குநேரி , சங்கரன் கோவில் , தென்காசி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை, கயத்தாறு, மரக்காணம், திண்டிவனம், மணிமுத்தாறு, வானூர், ஒட்டப்பிடாரம், பூதப்பாண்டி தலா 2 செ.மீ., கன்னியாகுமரி, விழுப்புரம், செஞ்சி, புதுச்சேரி, கடலூர், விளாத்திக்குளம், அம்பாசமுத்திரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி