ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை


ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடுபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் வட்டார பொதுக்குழு கூட்டம் வேடசந்தூரில் நடந்தது. வட்டாரத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் மலர்விழி முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார். மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஜோசப் சேவியர், பொரு ளாளர் பாண்டியராஜன், மாநில துணைத்தலைவர் பாபு கலந்து கொண்டனர்.

வேடசந்தூர் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் பாடம் பயின்ற பட்டதாரிகளை அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேடசந்தூர் வட்டார தலைவராக முருகேசன், செயலாளராக கோதண்டராமன், துணைத்தலைவராக அமலன், இணை செயலாளராக நீலவேணி, செயற்குழு உறுப்பினர்களாக குமாரவேல், மோகன், கோமதி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி