உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2014

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் வெளியீடு

அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள இடங்களில் 1,093 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை டிஆர்பி மேற்கொண்டு வருகிறது.

இதுவரை ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயிரின வளர்ப்புப் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதித் தேர்வுப் பட்டியலை டி.ஆர்.பி. வெளியிட்டிருந்தது.

கணிதம், இயற்பியல், இயற்பியல் - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் அறிவியல் - எலெக்ட்ரானிக் தகவல் தொடர்பியல், புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான இறுதித் தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வரலாறு, சுற்றுலா, சுற்றுலா-பயண மேலாண்மை பாடப் பிரிவுகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியலை டி.ஆர்.பி. இப்போது வெளியிட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

இவர்களுக்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பாடப் பிரிவுகளுக்கு எப்போது நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்ற விவரம் அவ்வப்போது இணையதளத்தில் வெளியிடப்படும் என டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

2 comments:

  1. கணிதம், இயற்பியல், இயற்பியல் - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் அறிவியல் - எலெக்ட்ரானிக் தகவல் தொடர்பியல், புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான selection list was released already. Kindly correct in the kalviseithi website.

    ReplyDelete
  2. அன்புடன் கல்விச்செய்திக்கு,எனது மனைவி யின் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் தொலைந்து விட்டது .அதனை எவ்வாறு பெறுவது .தயவுசெய்து சொல்லுங்கள் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி