ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2014

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி



உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "ஆகாஷ்' ஏவுகணை, ஒடிஸா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் எம்.வி.கே.வி.பிரசாத் கூறுகையில், "இது விமானப் படையினரின் வழக்கமான சோதனைகளில் ஒன்று. இதுபோன்று மேலும் சில ஏவுகணைகள் இந்த வாரத்தில் சோதிக்கப்பட உள்ளன' என்றார்.

ஆகாஷ் ஏவுகணை, நிலத்தில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் நடுத்தர வகையைச் சேர்ந்ததாகும். இது, 60 கிலோ எடை கொண்ட வெடிபொருள்களுடன் 25 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டதாகும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை ஏற்கெனவே விமானப் படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. தரைப்படைக்கான ஏவுகணை வடிவமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி