டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்:தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2014

டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்:தமிழக அரசு உத்தரவு

:உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே, தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.தமிழக பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை என, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இனவாரி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.கடந்த, 2012ல், சிறப்பாசிரியர் பிரிவில், உடற்கல்வி ஆசிரியர்கள், 1,028 பேரை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், மாநில அளவில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதை எதிர்த்து, முத்துவேலன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.


விசாரணை முடிவில், சிறப்பாசிரியர் பணிக்கு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தமிழகத்தில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, முழு தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.மேலும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு அமைய வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய, புதிய விதிகளை உருவாக்க, டி.ஆர்.பி.,யிடம், தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

இதன் படி, டி.ஆர்.பி., அளித்த புதிய விதிமுறைகளை, பரிசீலித்த, தமிழக அரசு, அவற்றை அமல்படுத்தி, அரசாணை வெளியிட்டுள்ளது.இதன்படி, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அல்லாமல், டி.ஆர்.பி.,யால் நடத்தப்படும், தேர்வு அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவர்.வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.

மொத்தம், 100 மதிப்பெண்களில், 95 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்விற்கும், 5 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வுக்கும் வழங்கப்படும். ஒவ்வொரு காலியிடத்திற்கும், ஐந்து விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

மாநில, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பாடத்திட்டத்தை தயாரிக்கும். தேர்வு, மூன்று மணி நேரம், ஒரே தாளாக நடத்தப்படும்.'அப்ஜக்டிவ்' அடிப்படையில், 190 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், அரை மதிப்பெண் என, 95 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்தும் பணி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வர்கள் பட்டியல் வெளியிடுதல் என, அனைத்து பணிகளையும் டி.ஆர்.பி., மேற்கொள்ளும்.தேர்விற்கு, 500 ரூபாய் கட்டணம்; உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


5 மதிப்பெண்கள் எப்படி?

எண் தகுதி மதிப்பெண்

1. கூடுதல் கல்வித்தகுதி 0.5

2. முன்தகுதி (அரசு அல்லாதது) 0.5

3. அரசுப் பணி தகுதி 1

4. என்.சி.சி.,உட்பட கூடுதல் தகுதி 1.5

5 தோற்றப் பொலிவு 1.5

மொத்தம் 5

22 comments:

 1. Replies
  1. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்க்கு பின் கண்டிப்பாக பட்டதாரிஆசிரியர் பணியிடம் லிஸ்ட் வெளிவரும் கோடிஸ்வரன் நண்பரே... லிஸ்ட் தயாராகத்தான் உள்ளது.

   Delete
  2. Ungloda intha msg padikum happy a iruku sir.

   Delete
  3. குமரகுரு sir உங்களுக்கு எப்படி தகவல் கிடைத்தது நீங்கள் யூகத்தின் அடிப்படையில் சொல்ரீங்களா இல்லை உண்மையான தகவலா தயவு கூர்ந்து சொல்லுங்கள்

   Delete
  4. இப்படிக்கு tet தேர்வை எழுதி வெற்றி பெற்று ஏமாந்தோர் சங்கம்

   Delete
  5. சுகி சுகி அவர்களே யூகத்தின் அடிப்படையில் நான கூறவில்லை கண்டிப்பாக அடுத்த லிஸ்ட் உண்டு பொருமையாக இருங்கள் மனதளவில் நம்பிக்கை வையுங்கள் நண்பரே... 2014 டெட் தேலர்வு இல்லை ஆகையால் 2013-2014,2014-15, காலிப்பணியிடம் நமக்குத்தான் கடவுளை வேண்டுவோம் நண்பர்களே....

   Delete
  6. மிக்க நன்றி நண்பரே உங்களின் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது முருகன் துணை இருக்க வேண்டும்

   Delete
  7. வாசுகி சகோதரியே
   நீங்கள் ஏமாந்தோர் சங்கத்திலிருப்பாக பதிவிட வேண்டாம்.டெட்டில வெற்றி பெறுவதே பெரிய சாதனை.நீங்கள் ஒரு வெற்றியாளர்.நீங்கள் 100% தகுதி வாய்ந்தவர்.உங்கள் சகோதரனாக சொல்கிறேன் ,"உங்கள் மனதால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.குறைவான காலிபணியிடம் இருப்பது நமது தவறல்ல.

   Delete
 2. It is possible after sc judgement
  But confirm
  SAIRAM

  ReplyDelete
 3. Good Morning everybody.. Ovovru naalum, indru namaku nalladhu nadhandu vidum endra nambikayodu vizikirom.. ini varum naatkalum adhe nambikayodu than vizika pogirom.. aanal nalladu udhikum thisai thaan theriyavillai... Aanalum nambikayodu thaan kaathirupom.. Nalladhe nadakum... God will help us.... Soon....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் . நாள் தோறும் உங்களின் எதிபார்ப்பும் , ஏக்கமும் வார்த்தைகளாய், வரிகளாய் உதிக்கின்றன. நம்பிக்கை மனிதனின் அசைக்க முடியாத மனோபலம்... தன்னம்பிக்கை தடுக்க இயலாத தனித்துவம்.... இரண்டும் நம்மிடம் உண்டு... உங்களின் மின்னஞ்சலை இடுங்கள்...

   Delete
  2. dear fancy brother

   nallathu uthikkum thisai unkalin manathu erukkum edame
   karanam athil than unkalathu thannampiikai adanki ullathu

   nenkal unkalai nan valimai udaiyavan, thannammopikkai udaiyavan endru
   ninaithal nenkal kattayam valimai udiyavar akirirkal
   thannapikkai, valimai ellathavan endru ninaithal thanamampikkai ellathavar
   akirarkal
   nenkal epadi aka venum endru nenkale mudiveduthu kollunkal

   thanks
   ne ethai ninaikurayo athuvaka akirai ( svami vivekananthar)

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. dear chandru brother unkalin karuthu
  silarukku santhosathai tharalam but
  palarukku vethanaiyai tharum samuka valaithalathil ethu pondra
  karuthukalai pathividuvathai thayavu seithu niruthi vidunkal
  naam mattum kalvi seithiyai parpathillai samuka akkarai konda palar parkirarkal
  avarkalin nan mathippai nenkal ellakka vendi varum please
  please remove the comment imediatly

  ReplyDelete
 6. நனறி அகிலன் நண்பரே

  ReplyDelete
 7. முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
  முயலாமை வென்றதாக சரித்திரம் இல்லை.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி