நடப்பு ஆண்டுக்கான சிறந்த திரைப் பிரபலத்திற்கான மத்திய அரசின் விருது நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைக்கான இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோவாவில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்படும் என மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனத் திரைப்பட இயக்குனர் வோங் கர்வாய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ள திரைப்பட விழாவில் 75 நாடுகளைச் சேர்ந்த 179 திரைப்படங்கள், திரையிடப்படுகின்றன.
RAJINI IS OUR SUPER STAR. BUT THIS NEWS..TELL BJP NEED RAJINI.
ReplyDelete