கல்விச்சந்தையில்தொடரும் அவலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2014

கல்விச்சந்தையில்தொடரும் அவலம்


தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை அதி காரப்பூர்வமற்ற முறையில் துவங்கியிருக்கிறது.
அதுவும் மத்திய பாடத்திட்டத்தின் பேரில் லட்சக்கணக்கில் கூடுதல் கட்டணம் வசூலோடு சேர்க்கை முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறு கிறது. கல்வித்துறையோ கல் போல் அசைய மறுக்கிறது.தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமலான பிறகு, மெட்ரிக் பள்ளிகள் மீது இருந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

இதனால் கல்விச் சந்தையில் `மெட்ரிக்’ பாடத்திட்டத்திற்கான விலை இறங்குமுகத் திலேயே இருக்கிறது. இதற்கு மாற்றாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் ( சிபிஎஸ்இ) மற்றும் இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தின் ( ஐசிஎஸ்இ ) கீழ்செயல்படும் கல்வி நிறுவனங்களின் வணிகம் தற்போது ஏறு முகத்திலேயே இருக்கிறது.இதன் காரணமாகவே பல கல்வி நிறுவனங்கள் ’மெட்ரிக்’ முறையை முற்றும் துறந்து, சிபிஎஸ்இ அவதாரம் எடுக்க ஆரம்பித்திருக்கின்றன.கடந்த கல்வியாண்டிலேயே இது போன்ற சூழல் உருவானது. அதனை தொடர்ந்தே சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு சில உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக கட்டணக் கொள்ளையை தடுக்கும் விதமாக தமிழக அரசின் கல்வி கட்டணநிர்ணய சட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளி களையும்கட்டுப்படுத்தும், தமிழகத்தில் இயங் கும் இது போன்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்படுவார் எனவும் தனது உத்தரவில் கூறியிருந்தது.இந்த மூக்கணாங்கயிற்றை கொண்டே சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளின் தில்லு முல்லுகளையும் தமிழக அரசு கட்டுப்படுத்த முடியும். ஆனால் இது போன்ற பள்ளிகள் விஷயத்தில் தமிழக அரசு உரிய முறையில் தலையிட வில்லை என்பதுதான் உண்மை. அதன் காரணமாகவே இன்று இந்த பள்ளிகள் அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட மாட்டோம் என்ற அடிப்படையில் தன்னிச்சையாக மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.

மேலும் தமிழக அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணத்தை ஒரு பொருட்டாக இவர்கள் மதிப்பதாக தெரியவில்லை. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் ஒவ் வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில்தான்மாணவர் சேர்க்கை நடைபெறும்.அதுவும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படும். ஆனால் தற்போது இந்த பள்ளிகளில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதுவும் எல்கேஜி வகுப்பிற்கே ரூ. 1 லட்சம் வரை பல்வேறு விதமான கட்டணங் கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை தமிழக கல்வித்துறை எவ்வாறு அனுமதிக்கிறது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. மேலும் இது போன்ற பள்ளிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் தமிழ் மொழி ஒரு பாடமாகக் கூட இல்லை என்பதை பெருமையாக கூறும் அவல மும் அரங்கேறி வருகிறது. தமிழக அரசு உயர் நீதிமன்றஉத்தரவை அமல்படுத்தும் விதத்தில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்த வேண்டும். சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இபள்ளிகள் தமிழக அரசுநிர்ணயிக்கும் கட்டணத் திற்கு மிகாமல் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி