இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடும் சதவீதம் அதிகரித்து வருவதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கல்வி ஆலோசகர்கள் என்ற அமைப்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
6 முதல் 13 வயது வரையுள்ள படிக்காத சிறுவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் சேர்ந்து பல்வேறு காரணங்களால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியவர்கள் என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டில் இதே அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் படிக்காத சிறுவர்களில் 45.34 சதவீதத்தினர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் எனக் கண்டறியப்பட்டது.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்த விகிதம் 8 சதவீதம் மேலும் அதிகரித்திருப்பது கல்வியிலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட அனைவருக்கும் கவலை அளிக்கும் தகவலாகும். எனவே, மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்துவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதைச் சரி செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும்.
6 முதல் 13 வரையுள்ள குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக அவர்கள் வாழும் பகுதிகளிலேயே பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இதற்காகத்தான் அருகமைப் பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதைச் செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.
இனியாவது, பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அருகமைப் பள்ளித் திட்டத்தைச் செயல்படுத்துதல், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அனைத்து தனியார் பள்ளிகளும் செம்மையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தல் போன்றவற்றை தமிழக அரசு செய்ய வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக, அரசு பள்ளிகளின் தரத்தை அதிகரித்து மாணவர்கள் தேடிவரும் நிலையை ஏற்படுத்தி அனைத்து மாணவர்களும் தரமான கல்வி கற்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
100 சதவிகித தேர்ச்சிக்காக ஏற்கனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றுவது எந்த விதத்தில் நியாயம்..? இதற்க்கு யாரிடம் முறையிடுவது...? இப்படியான மாணாக்கர்க்ளுக்கு உஙகளால் உதவமுடியுமா..? இதை தடுக்க முடியுமா?
ReplyDeleteகட்டாயமாக வெளியேற்றி பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியுமா..?