பணி வரன்முறை இல்லை : 1,200 ஆசிரியர்கள் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2014

பணி வரன்முறை இல்லை : 1,200 ஆசிரியர்கள் தவிப்பு


ஆறு ஆண்டுகளாக பணி வரன்முறை செய்யாததால் பதவிஉயர்வு, ஊக்க ஊதியமின்றி 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவித்து வருகின்றனர்.அரசு மேல்நிலை பள்ளிகளில் 1996ல் தொகுப்பூதியத்தில் 1880 கம்ப்யூட்டர் ஆசிரிய பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2008ல் தேர்வு நடத்தப்பட்டு 1,060 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.இதில் 140 பேர் மட்டும் தேர்ச்சி பெற்று பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். தேர்ச்சி பெறாத 656 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.பணிநிரந்தரம் செய்யப்பட்டவர்கள் ஆறு ஆண்டுகளாகியும் இதுவரை பணி வரன்முறை செய்யப்படவில்லை. இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்ற பணப்பலன்கிடைக்கவில்லை. மற்ற ஆசிரியர்களை போல் இடமாறுதலும் வழங்கப்படவில்லை. இதனால் 1,200 பேரும் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மேல்நிலை முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் அருள்ஜோதி கூறியதாவது: ஆதிதிராவிடர் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 50 கம்ப்யூட்டர் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு ஆக.,27 ல் கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது. முதுகலை பட்டம் முடித்தும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது காலியாக உள்ள 656 பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட உள்ளன. அதற்குள் எங்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். பணி வரன்முறைப்படுத்த வேண்டும், என்றார்.

2 comments:

  1. BROTHERS, YOU ARE WAITING FOR TRANSFER. BUT YOUR BROTHER WAITING FOR LIFE 656. AND ALSO THE AIDED SCHOOL COMPUTER TEACHERS AND MATRICULATION SCHOOL COMPUTER TEACHERS ALSO MISSING THE GOVT.SALARY CHANCE BECAUSE OF B.ED SENIORITY. SO STRENGTH IS LIFE. PLEASE COOP WITH THAT PEOPLES FOR YOUR BROTHERS LIFE. USE NEW IDEA TO THAT TEAM. WE ARE NOT FOOL. GOD WITH US.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி