விருப்ப அடிப்படை மதிப்பீடு திட்டம்: புதிய விதிகளை யு.ஜி.சி., உருவாக்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2014

விருப்ப அடிப்படை மதிப்பீடு திட்டம்: புதிய விதிகளை யு.ஜி.சி., உருவாக்கியது

பல்கலைகளில், விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டத்திற்கான, புதிய விதிமுறைகளை, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., வகுத்துள்ளது.


இதுகுறித்து, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து எழுதியுள்ள கடிதம்: பல்கலைகள், தங்களுக்கு என தனியான மதிப்பீட்டு முறையை பின்பற்றுகின்றன. இதனால், மாணவர்கள் பிற பல்கலைகளுக்கு உயர்கல்விக்கு செல்லும் போதும், பணி வாய்ப்பு பெறும் போதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னையை போக்க, 'விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டம் - சி.பி.சி.எஸ்.,' என்ற திட்டத்தை யு.ஜி.சி., கொண்டு வந்து, அதை பல்கலைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதே நேரம், ஒரு பல்கலையில் இருந்து மற்றொரு பல்கலைக்கு மாறும் மாணவர்களுக்கு, சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, சி.பி.சி.எஸ்., திட்டத்திற்கு, பொதுவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை, பல்கலைகள் பின்பற்ற வேண்டும். இந்த திட்டத்தை, 2015 - 16 கல்வி ஆண்டு முதல், செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி