வாட்ஸ் அப் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷனுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ஃபேஸ்புக் சலித்துவிட்டதாக ஆய்வில் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

வாட்ஸ் அப் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷனுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ஃபேஸ்புக் சலித்துவிட்டதாக ஆய்வில் தகவல்




தகவல் தொடர்புக்கு ஃபேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக தளங்களை விட வாட்ஸப், வி சாட் போன்ற வசதிகளை பயன்படுத்துவது மக்களிடையே அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குளோபல் வெப் இண்டெக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக் சமூக தளத்தை பயன்படுத்தி சலிப்பு ஏற்பட்டு விட்டதாக கூறுவோர் எண்ணிக்கை முன் எப்போதையும் விட அதிகரித்துவிட்டதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

அதே சமயம் வாட்ஸப் போன்ற மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷன்கள் மூலம் தகவல் தொடர்பு எளிதாகவும் விரைவாகவும் இருப்பதாகவும் பலரும் இதை பயன்படுத்துவதால் தாங்களும் இதற்கு மாறியதாகவும் இந்த ஆய்வில் பங்கேற்றோர் தெரிவித்துள்ளனர். ஆசிய அளவில் வி சாட்பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் வாட்ஸப் பிரபலமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி