செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2014

செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார்


பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், செய்முறை தேர்வுக்காக, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க, அலைக்கழிக்கப்படுவதாக புகார்எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தனித்தேர்வர்களாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. தவிர, முந்தைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியை தழுவியவர்களும், இத்தேர்வில் பங்கேற்கலாம்.நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு, வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கு, மாவட்டந்தோறும் உள்ள நோடல் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். கோவை மாவட்டத்திற்கு, ராஜவீதி, சூலுார் மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் நோடல் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு விண்ணப்பிக்க செல்லும் மாணவர்களுக்கு, உரிய தகவல்களை முறையாக அளிக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க, எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான மாற்று சான்றிதழ் நகல், அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவையே போதுமானது.இந்த ஒப்புகை சீட்டு இருந்தால் மட்டுமே, தேர்வுக்கான அனுமதி சீட்டை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், நோடல் மையங்களில் விண்ணப்பிக்க செல்லும் மாணவர்களை காத்திருக்க வைப்பதும், கல்வி சான்றுகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படாமல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், கல்வி சான்றுகளுடன் எங்கு விண்ணப்பிப்பது என தெரியாமல், தனித்தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலக அதிகாரிகள் சிலர் கூறுகையில், &'&'கடந்த செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் தனித்தேர்வர்களுக்கான, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதற்கு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தோருக்காக, மதிப்பெண்கள் சரிபார்க்கும் பணி, நோடல் மையங்களில்நடக்கிறது. இதனால், புதிய விண்ணப்பங்களை ஏற்பதில் தாமதம் ஏற்படலாம். இருப்பினும், உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, தனித்தேர்வர்களது சிரமம் குறைய நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி