ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2014

ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் கண்டனம்

அரசுப் போக்குவரத்துக் கழங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர்களைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சேம ஓட்டுநர்கள், சேம நடத்துநர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குச் சுமார் 16 ஆயிரம் பேரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக நேரடித் தேர்வு முறையின் மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதியும், பதிவு மூப்பும் கொண்டவர்களின் பட்டியலைப் பெற்று, சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்வதுதான் வழக்கம்.

அந்த நடைமுறையைப் பின்பற்றாமல் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று ஓட்டுநர்கள், நடத்துநர்களை நியமிப்பது சரியான நடைமுறையாக இருக்காது.

ஆட்சியாளர்களுக்கு ஒத்துவராதவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, ஆதரவானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் விண்ணப்பதாரர்களை மட்டும் நியமிக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே, போக்குவரத்துக் கழக பணியாளர்களை நேரடியாகத் தேர்வு செய்யும் முறையை கைவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்றார் ராமதாஸ்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி