மின் கட்டண உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சென்னை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
இதில் பங்கேற்ற பொதுமக்கள் மின் கட்டணத்தை உயர்த்துவதுற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, மக்கள் தெரிவித்த கருத்துக்கள், ஆட்சேபனைகள், ஆலோசனைகள் குறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது மின் கட்டண உயர்வை வரும் 10ஆம் தேதி அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உயர்த்தப்படும் மின் கட்டண பட்டியலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டதும் அந்த தேதியில் இருந்து இந்த மாதமே மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்து விடும்.
உத்தேச பட்டியல்
மேலும், உத்தேச விலைப்பட்டியலும் வெளியாகியுள்ளன. அதன்படி, முதல் 100 யூனிட்டுக்கு ரூ.3ம், 101 முதல் 200 யூனிட்டுக்கு ரூ.3.25ம், 201 முதல் 500 யூனிட்டுக்கு ரூ.4.60ம், 501 யூனிட்டுக்கு மேல்6.60ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கடைகளுக்கு 100 யூனிட்டுக்கு மேல் 8.05ம், தொழிற்சாலைகளுக்குரூ.7.22ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆ.நலப்பள்ளி தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் நண்பர்களே!இன்று வரும், நாளை வரும் என்று காத்திருந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.அன்று அனைவரும் ஆ.சி.வாரியம் சென்று தேர்வு பட்டியலை உடனடியாக வெளியட வேண்டும் என்று கோரிக்கை
ReplyDeleteவைத்தனர், அடுத்த நாளே பட்டியல் வெளிவந்தது. தேர்வு பட்டியலில் தேர்வாகிருக்கும் நண்பர்களே, தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் நண்பர்களே, அனைவரும் சென்று ஆ.சி.வாரியத்திடம் உடனே தேர்வு பட்டியலை வெளியட வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும்.இல்லையென்றல் இந்த அரசு ஒரு முயற்சியும் எடுக்காது.இப்படியே சென்றால் கேஸ் வரும்போது வரட்டும் என்று அரசு இருந்துவிடும்.திரு.அகிலன் சொன்னதுபோலே அனைவரும் சென்றுந்தால் இதுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும், லிஸ்ட் வரும் ஆனால் காலம் கடந்து வரும், அனைத்து நண்பர்களும் சிந்திங்கள், அனைவரும் ஒன்றிணைவோம்.
This comment has been removed by the author.
Deleteennaiku sollunga pogalam
ReplyDeletep1ku adutha liat yepo varum ?
ReplyDeletep1ku adutha list yepo varum ?
ReplyDelete