பூமிசுற்றும் போது மனிதன் சுற்றாதது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2014

பூமிசுற்றும் போது மனிதன் சுற்றாதது ஏன்?


ஒவ்வொரு நாளும் பூமி சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. ஆனால், பூமி சுற்றும் போதுஏன் அதிலுள்ள மனிதர்கள் சுற்றுவதில்லை என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதற்கான விளக்கத்தை படித்து தெரிந்து கொள்ளலாம் இன்றைய தகவல் துளிகளில்.

பூமி சூரியனை சுற்றி வருவதை போலந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் 1545 ஆம் ஆண்டில் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தார். அவரின் கூற்றுப்படி, தன்னைத் தன் அச்சிலேயே சுற்றிக்கொள்வது, சூரியனைச் சுற்றி வருவது என இரண்டு விதமான இயக்கங்களை பூமி கொண்டுள்ளது. ஆனால், இந்த இயக்கங்களை நம்மால் உணரமுடிவதில்லை.இதற்கு பூமியின் ஈர்ப்பு விசையே காரணமாக உள்ளது. காற்று மண்டலம் உட்பட, பூமியின்மீதுள்ள ஒவ்வொரு பொருளும் பூமியுடன் சேர்ந்தே சுற்றுகிறது. சாதாரணமாகவே புவியோட்டின் வெளிப்புறமாக மேல், கீழ் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கால்கள் பூமியை நோக்கி இருக்குமாறும், தலை வெளிப்புறமாகவும் தான் நாம் நடக்கிறோம். அதன் மூலம் ஈர்ப்பு விசை, நம்மை பூமியுடன் பிணைக்கச் செய்கிறது.இதன் காரணமாகவே நாம் பூமியிலிருந்து கீழே விழாமலும், பூமி சுற்றும் போது நாமும் உடன் சேர்ந்து சுற்றாமலும் இருக்கிறோம்.

அதே சமயம் பூமியும் அண்டவெளியில் பயணித்துக் கொண்டிருப்பதால், அதன் திசைக்கு எதிரான ஒரு காற்றோட்டத்தை நாம் உணரவேண்டும். உதாரணமாக, இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்க்காற்று நம் மீது மோதுவது போல் தோன்றுவதை போன்று, பூமியின் பயணத்திலும் நாம் உணர வேண்டும்.அதேபோல் பூமி நகரும் போது அந்த அழுத்தத்தை நம் கால்கள் உணர வேண்டும். ஆனால், இப்படியெல்லாம் தோன்றாததற்கு காரணமும் புவியீர்ப்பு விசை தான்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி