கோவை : முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன தேர்வுக்கானவிண்ணப்பங்கள், கோவையில் இரண்டாம் நாளே விற்றுத்தீர்ந்தன.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள, 1,807 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு , வரும் ஜன., 10ம் தேதி நடக்கவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், முதன்மை கல்வி அலுவலகங்களில் வினியோகிக்கப்பட்டது. கோவையில், முதல் நாள், 1500 விண்ணப்பங்களும், இரண்டாம் நாளான நேற்று 1700 விண்ணப்பங்களும் விற்பனை செய்யப்பட்டன.
விண்ணப்பங்கள் தீர்ந்து போனதால், வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முதன்மை கல்வி அதிகாரி கூறுகையில், ''முதல்கட்டமாக வழங்கப்பட்ட 3200 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கால அவகாசம் இருப்பதால், விண்ணப்பம் கிடைக்காத தேர்வர்கள் பதட்டப்பட தேவையில்லை. தேர்வர்கள், 0422-2391062, 2391849 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் விசாரித்துவிட்டு, வரலாம்,'' என்றார்.
Eppo pg secondsecond list varum?
ReplyDelete