TNPSC: குரூப் 2 முதன்மை தேர்வு: 11 ஆயிரத்து 493 பேர் எழுதுகின்றனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2014

TNPSC: குரூப் 2 முதன்மை தேர்வு: 11 ஆயிரத்து 493 பேர் எழுதுகின்றனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.கணினி வழித்தேர்வு காலையிலும், எழுத்து தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகின்றன.
தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் 44 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 11 ஆயிரத்து 493 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஏற்கனவே, முதற்கட்ட தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது.அதன் முடிவுகள் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தகுதி பெற்றவர்கள் இன்று நடைபெறும் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

இதில், தேர்வு செய்யப்படும் ஆயிரத்து 64 பேர் அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில், வெற்றி பெறுபவர்கள், நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட பணிகளில் அமர்த்தப்படுவர்.

1 comment:

  1. நண்பர்களுக்கு வணக்கம்... நலத்துறை /மைனாரிட்டி/ பள்ளிகளில் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளுங்கள். ரிஷி.சென்னை 9962157723

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி