தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் எழுதியடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2014

தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் எழுதியடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு


தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 4 ஆயிரத்து 963 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 21ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வை 10 லட்சம் பேர் எழுதினர். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம், பொது அறிவு ஆகிய பகுதிகளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, குரூப் 4 தேர்வுக¢கான உத்தேச விடைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள்இணையதளத்தில் விடைகளை சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபனைஇருந்தால், அது தொடர்பாக 7 நாட்களுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தெரிவிக்கலாம். வரும் 30ம் தேதிக்கு பிறகு வரும் ஆட்சேபனைகள் ஏற்றுக் கொள்ளப்படாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி