2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி : ராதாகிருஷ்ணன் முதலிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2014

2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி : ராதாகிருஷ்ணன் முதலிடம்

2014-ம் ஆண்டிற்கான உலகி்ன் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
லண்டனில் இருந்து வெளிவரும் நேச்சர் எனப்படும் அறிவியல் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை(இஸ்ரோ) சேர்ந்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிட்டத்தை அளித்துள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

கேரள மாநிலத்தில் பிறந்த இவர் எலக்ட்ரிக்கல் அண்ட் எல்க்ட்ரானி்க்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பெங்களூருவில் எம்.பி.ஏ., பட்டமும், காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் பி.எச்.டி பட்டமும் பெற்றுள்ளார். இதன் பின்னர் 1973ம் ஆண்டு இஸ்ரோவல் பணிக்கு சேர்ந்தார். 

படிப்படியாக முன்னேறிய இவர் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி இஸ்ரோவின் தலைமை பொறுப்பை ஏற்றார். இவரது பதவிக்காலத்தில் தான் நிலவிற்கு சந்திராயன் விண்கலத்தை அனுப்பி நிலவில்நீர் இருப்பதை கண்டறிந்து உலகத்தை இந்தியாவி்ன் மீது பதிய வைத்தார் . 

மேலும் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளிலேயே முதன் முறையாக செவ்வாய்கிரகத்திற்கு மங்கல்யான் என்ற பெயரில் விண்கலத்தை அனுப்பிய நாடு இந்தியா என்ற பெருமையை நாட்டிற்கு பெற்று தந்தார். இதன் பி்ன்னர் பேஸ் புக்கில் இஸ்ரோவிற்கான வாசகர்கள் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது மட்டுமல்லாது இவரது பதவிக்காலத்தி்ல் தான் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட ராக்கெட் செலுத்த பயன்படும் கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை சிறு சிறு மாற்றத்தை ஏற்படுத்தி அதன் திறனை மேம்படுத்தியது, மற்றும் சமீபத்தில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பி வைத்த மார்க் -3 ராக்கெட் தொழில் நுட்பம் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டி வரும் இவர் விஞ்ஞானத்தில் ஈடுபட வரும்படி இளைஞி மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆராய்ச்சி பரிவில் ஆண், பெண் பேதம் கிடையாது என்று கூறி வரும் இவரின் கருத்தை அங்கீகரிக்கும் இஸ்ரோவில் பெண் விஞ்ஞானிகள் 20 சதவீதம் பேர் பணி புரிந்து வருகின்றனர்

நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு துறைகளுக்கு இஸ்ரோ மூலம் உதவி புரிந்துள்ள இவர் வரும் 31-ம் தேதி தலைவர் பதவியில் இருந்து ஒய்வு பெற உள்ளார்.

3 comments:

  1. Why this kolaveri? He is selected as one of the top 10 and his name is mentioned in 8th place. Do not make fools by overstating. There are enough people to believe you. Please post responsible articles. You can find the actual article from : http://www.nature.com/news/365-days-nature-s-10-1.16562

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி