படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுமையம்: அரசுக்கு நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2014

படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுமையம்: அரசுக்கு நோட்டீஸ்

அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு மையங்களைஏற்படுத்தக் கோரும் மனுவுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதிமுக மாணவரணி மாநிலச் செயலர் டி.எம்.ராஜேந்திரன் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், கிராமப்புற மாணவர்கள் தொலைதூரம் சென்று தேர்வுஎழுதுவதால் சோர்வு ஏற்பட்டு முழுத் திறனையும் செலுத்த முடியாத நிலைஉள்ளது. இதனால் மதிப்பெண் குறைவு ஏற்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதி டி.ராஜா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி