காமராஜர் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2014

காமராஜர் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் 2014 தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக தேர்வாணையர் பெ.விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் -2014 தேர்வு முடிவுகள் கீழ்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 18-ம் தேதியும், எம்.காம்(சிஏ), எம்.எஸ்.ஐ.டி, எம்.எஸ்சி(ஐடிஎம்), எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 19-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இத்தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ர்ழ்ஞ் என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.மேற்கண்ட பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், அதற்குரிய விண்ணப்பங்களை ஜனவரி 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.மறுமதிப்பீட்டு கட்டணத்தை கேட்பு வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப தரப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி