பிளஸ் 2 மாணவர்களுக்குதொடர் தேர்வுகள் அறிவிப்பு:மாற்றம் செய்ய வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்குதொடர் தேர்வுகள் அறிவிப்பு:மாற்றம் செய்ய வலியுறுத்தல்


மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள்அறிவிக்கப்பட்டுள்ளதில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரையாண்டு தேர்வு தற்போது முடிந்த நிலையில் ஜன.,2ல் பள்ளிகள் திறக்கப்பட்டு 5ம் தேதி முதல் 22 வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடக்கிறது.

பின் ஜன., 29ல் துவங்கி பிப்.,5 வரை இரண்டாம் திருப்புதல் தேர்வு நடக்கிறது. அதை தொடர்ந்து அரசு செய்முறை தேர்வுகள் துவங்குகிறது.இவ்வாறு தொடர்ந்துதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்புதல் தேர்வுகளில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவும், பொதுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சரவணமுருகன், மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன் கூறுகையில் "பொதுவாக அரசு செய்முறை தேர்வுக்கு பின் தான் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடக்கும். ஆனால் இம்முறை அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து தேர்வுகள் இருப்பதால் மாணவர்களுக்கு சில அசவுரியங்கள் ஏற்படும். எனவே வழக்கம்போல் செய்முறை தேர்வுக்கு பின்இரண்டாம் திருப்புதல் தேர்வை நடத்த வலியுறுத்தியுள்ளோம்" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி