ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 விண்கலம் இம்மாத இறுதிக்குள் சோதனை "இஸ்ரோ' விஞ்ஞானி பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 விண்கலம் இம்மாத இறுதிக்குள் சோதனை "இஸ்ரோ' விஞ்ஞானி பேட்டி

அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 என்ற விண்கலம் குறித்த சோதனை டிசம்பர் மாத இறுதிக்குள் நடைபெறும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ஐஎஸ்ஆர்ஓ) மகேந்திரகிரி மைய இயக்குநர் டி. கார்த்திகேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தூத்துக்குடியில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) 1,500 கிலோ எடை வரையிலான குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்பும் பி.எஸ்.எல்.வி. விண்கலங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இருப்பினும், அதிக எடை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இன்னும் வெளிநாட்டு விண்வெளி அமைப்புகளின் விண்கலங்களையே நம்பியுள்ளோம்.

இதைத் தவிர்க்கும் பொருட்டு 4 டன் வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் பெரிய வகையைச் சேர்ந்த ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 என்ற விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது.

இந்த விண்கலம் இம்மாத இறுதிக்குள் சோதனைக் குள்படுத்தப்பட்டு விரைவில் விண்ணில் ஏவப்படும் என்றார் டி. கார்த்திகேசன்.

1 comment:

  1. Good morning friends.today ramar cause list la irukaaaaaaaaaaaaaaaaaa..........????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி