குரூப்-4 பகுதி -6 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2014

குரூப்-4 பகுதி -6

கோவூர்கிழார்

இளமைகாலம்:

* பிறந்த ஊர்: உறையூருக்கு அருகிலுள்ள "கோவூர்"

* மரபு: வேளாளர் மரபு.

* பாடியவை: நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 * பாடல்கள் உள்ளன.


* அவைக்களத் தலைவர்: நலங்கிள்ளி என்ற மன்னன் கோவூர்கிழாரின் புலமையை அறிந்து அவரை "அவைக்களப் தலைவர்" ஆகினான்.போரைத் தவிரித்த புலவர்:

* சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது.

* நலங்கிள்ளி உறையூருக்கு அருகில் உள்ள ஆவூர்க்கோட்டையை முற்றுகையிட்டான்.

* கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் "நீ வீரனாக இருந்தால் போரிடு; அல்லது கோட்டையை ஒப்படைத்துவிடு; இரண்டில் எதையும் செய்யாமல் கோட்டை மதிலுக்குள் ஒடுங்கியிருப்பது நாணும் தன்மையுடையது" என்றார்.

* கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம், "நெடுங்கிள்ளியே! உன்னோடு போர் புரிய, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டிருப்பவன் பனம்பூ மாலையணிந்தசேரனும் அல்லன்; வேப்பம்பூ மாலையணிந்த பாண்டியனும் அல்லன்; சோழருக்குரிய அத்திமாலை அணிந்தவனே. உம் இருவருள் எவர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே" என்றார்.

* ஆதலால் "போரை ஒழிமின்" என்றார்.மலையமான் பிள்ளைகளை காத்தல்:

*குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புகார் நகரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். இவன் சிறந்த கவிஞன்.

*கிள்ளிவளவனுக்கும், கடையேழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரிக்கும் பெரும் பகை இருந்தது. கிள்ளிவளவன் காரியின் இரு பிள்ளைகளையும் கவர்ந்து வந்து யானை காலில் இடறிக் கொள்ள முடிவு செய்தான்.

*கோவூர்கிழார் கிள்ளிவலவனிடம் சோழ முன்னோர்கள் பெருமை எடுத்துக்கூறி காரியின் இரு பிள்ளைகளையும் மீட்டார்.சிறை மீட்ட செம்மல்:

*நலங்கிள்ளியை பாடி பரிசு பெற்ற இளந்தரையனார், நெடுங்கிள்ளியிடம் சென்று பாடினார்.

இளந்தரையனாரை நலங்கிள்ளியின் ஒட்டட்ரன் என்று கருதிய நெடுங்கிள்ளி அவரை *சிறையிலிட்டான்.

*கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் புலவர்களின் இயல்புகளை எடுத்துக்கூறி அவரை மீட்டார்.திரிகடுகம்

இல்லர்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்

நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்

துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்

நன்றறியும் மாந்தர்க் குள.

நல்லாதனார்சொற்பொருள்:

*பால்ப்பற்றி - ஒருபக்கச் சார்பு

*சாயினும் - அழியினும்

*தூஉயம் - தூய்மை உடையோர்

*ஈயும் - அளிக்கும்

*நெறி - வழி

*மாந்தர் - மக்கள்

*வனப்பு - அழகு

*தூறு - புதர்

*வித்து - விதைஆசிரியர் குறிப்பு:

*திருகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.

*நூறு வெண்பாக்களை கொண்டது.

*"சுக்கு, மிளகு, திப்பிலி" ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய மருந்துக்கு "திரிகடுகம்" எனப் பெயர்.

*அதுப்போல், திருகடுகம் என்னும் இந்நூல், மூன்று கருத்துக்களை உள்ளடக்கி மனிதனின் மனமயக்கத்தை நீக்குகிறது.கணித மேதை இராமனுஜம்

*பிறப்பு: 22.12.1887

*ஊர்: ஈரோடு

*பெற்றோர்: சீனுவாசன் - கோமளம்

*இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.

*தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார்.கும்பகோணம்:

*இராமனுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் "கும்பகோணம்" வந்தால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது.பூஜ்யத்திற்கு மதிப்புண்டு:

*ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் "பூஜ்யத்திற்கு மதிப்பில்லை" என கூற, அதற்கு இராமானுஜன்  பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி எடுத்துரைத்தார்.

*இராமானுஜர் தமது சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.கார்:
*1880இல் இலண்டன் நகரில் "கார்" என்பவர் பதினைந்தாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதுப்போல, இவரும் சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்.

எழுத்தர் பணி:
*தந்தை சீனுவாசனின் முயற்சியால் இவருக்கு சென்னை துறைமுகத்தில் "எழுத்தர்" சிறந்து விளங்கினார்.

பெர்னெளலிஸ் எண்கள்:
* தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் கேள்விகளாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிகைக்குச் சென்னை துறைமுகத்தின் தலைமை பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பார் மூலம் அனுப்பினார். "பெர்னெளலிஸ் எண்கள்" எனும் தலைப்பில் வெளியான அவரது கட்டுரை, மிகந்த வரவேற்பை பெற்றது.

*தனது கண்டுப்பிடிப்புகளை இந்தியக் கணிதக் கழகப் பத்திரிகைக்கு இராமானுஜம் யார் மூலம் அனுப்பினார்?  - ஃபிரான்சிஸ் ஸ்பிரிங்

*பெர்னெளலிஸ் எனும் தலைப்பில் வெளியான இராமானுஜத்தின் கட்டுரை கணித வல்லுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

*இராமானுஜம் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.

* இராமானுஜம் தனது கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றை விவரமாக எழுதி இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு கடிதமாக அனுப்பினார்.

*இலண்டன் கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரியின் பெயர் - திரினிட்டி கல்லூரி.

* கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை என்று கூறியவர் - இந்திரா காந்தி.

* ஐகோபி எந்த நாட்டில் வாழ்ந்தார் - ஜெர்மனியில்

* ஐகோபி எந்த நூற்றாண்டின் கணிதமேதை - 19 ஆம் நூற்றாண்டு.

* ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஐகோபி என்று கூறியவர் - லிட்டில் வுட்டு

* ஆய்வர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - சுவிட்சர்லாந்தைச்

* ஆய்வர் 18 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை ஆவார்.

* திரினிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச். நெவில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவாற்ற வந்தார்.

* இராமானுஜம் எந்த ஆண்டு 1914 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.

* திரினிட்டி கல்லூரியில் 18.04.1914 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார்.

* கிங்ஸ் கல்லூரியின் கணிதப் பேராசிரியர் - ஆர்தர் பெர்சி.

* இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்ந்தவர் - ஹார்டி

* ஹார்டி ரோசரஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டார்.

* இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் உறுப்பினராக இராமானுஜம் 1918 ஆண் ஆண்டு சேர்க்கப்பட்டார்.

* இங்கிலாந்து பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு எஃப்.ஆர்.எஸ் பட்டம் வழங்கியது.

* எஃப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற இராமானுஜத்தை திரினிட்டி கல்லூரி பாராட்டிச் சிறப்பித்தது.

* ஹார்டியின் பரிந்துரையின் பேரில் சென்னைப் பல்கலைக் கழகமும் 250 பவுண்டுத் தொகையை ஐந்து ஆண்டுக்கும் கொடுக்க முன்வந்தது.

* இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.

* இராமானுஜத்தைப் பார்க்க வந்த ஹார்டி 1729 என்ற எண் கொண்ட வாடகை மகிழுந்தில் வந்தேன் எனக் கூறினார்.

* இராமானுஜம் இந்தியாவிற்கு திரும்பி வந்த ஆண்டு - 1919 ஆம் ஆண்டு மார்ச் 27ம் தேதி.

* இராமானுஜம் மறைந்த ஆண்டு 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி.

* இராமானுஜம் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - பேராசிரியர் ஈ.டி. பெல்

* இராமானுஜன் முதல்தரமான கணித மேதை என்று கூறியவர் - பேராசிரியர் சூலியன் கக்சுலி

* இராமானுஜத்தின் குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தோற்றங்கள் இருந்தன.

* 1957 ஆம் ஆண்டு டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் இராமானுஜத்தின் தேற்றங்களை ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

* 1962 டிசம்பர் 22 ஆம் தேதி இராமானுஜத்தின் 75வது பிறந்த நாள் ஆகும்.

* இராமானுஜத்தின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு நடுவணரசு பதினைந்து காசு அஞ்சல்தலை இருத்தைந்து இலட்சம் வெளியிட்டது.

*  பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு 1971 ஆம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்டது.

* சென்னையில் 03.10.1972 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.

* சென்னை துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க்கப்பலுக்கு, சீனுவாச இராமானுஜம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

* ரிச்சர்ட்டும் ஆஸ்கேயும் இணைந்து 1984 ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்குக் கொண்டு வந்து வழங்கினர்.

* கணிதக் குறிப்புகள் அடங்கிய எத்தனை குறிப்பேடுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இராமானுஜம் விட்டுச் சென்றுள்ளார்.

* இராமானுஜன் எண்: 1729 என்பதை இராமானுஜன் எண் என்பர்.


1 comment:

 1. கூட்டுறவு உதவியாளர் தேர்வு முடிவு
  தேர்வு முடிவு எப்போது? மாவட்ட வாரியாக நேர்காணல் முடிந்து 3 மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியாகாமல் உள்ள கூட்டுறவு உதவியாளர் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என 2 வருடங்களாக காத்திருப்போருக்கு அரசின் பதில்?
  தமிழக கூட்டுறவு துறை சிறப்பு விருதுகள் பெரும் இவ்வேளையில் இன்னும் ஏன் தேர்வு முடிவை அறிவிக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.
  மக்கள் முதல்வர் முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  தேர்வு நடைபெற்ற நாள்:09/Dec/2012
  மாவட்ட வாரி நேர்காணல்: Sep- 21 - 30 /2014.
  Dear கல்வி செய்தி pls dont ignore/remove this news:
  Please share your comments friends,

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி