அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2014

அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதத்தை சுமந்து சென்று இலக்கை தாக்கும் திறன் உடைய அக்னி - 4 ஏவுகணை சோதனை, நேற்று மீண்டும் வெற்றி கரமாக நடந்தது. அக்னி - 4 ஏவுகணைச் சோதனை, ஏற்கனவே மூன்று முறை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகேயுள்ள வீலர் தீவிலிருந்து, நான்காவது முறையாக நேற்று வெற்றிகரமாக மீண்டும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதுகுறித்து, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான, டி.ஆர்.டி.ஓ.,வின் மூத்த அதிகாரி ரவி குமார் கூறியதாவது: அக்னி - 4 ஏவுகணை, நேற்று காலை, 10:20க்கு, நடமாடும் ஏவுதளத்தின் உதவியுடன் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி, அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது. ஏவுகணையின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், பாதுகாப்புக்காகவும், ஒடிசா கடற் பகுதியில் இரண்டு போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இவ்வாறு, அவர் கூறினார்.சிறப்பம்சங்கள் என்ன?


* இந்த ஏவுகணை, நிலத்திலிருந்து, நிலத்தின் மற்ற பகுதியில் உள்ள, 4,000 கி.மீ, தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கக் கூடியது.


* அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் உடையது.


* 'ஸ்டேட் ஆப் ஆர்ட்ஸ்' எனப்படும், அதிநவீன, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் தயாரானது.


* இலக்கை நோக்கி செல்லும் போது, வானிலை மாற்றத்தால் ஏற்படும் இடையூறுகளை தானாகவே சரி செய்யும் தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது.


* ஏவுகணையை விரும்பிய திசையில் இயக்கி, இலக்கை துல்லியமாக தாக்க வைக்கும் வகையிலான, 'மைக்ரோ நேவிகேஷன் சிஸ்டம்' இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


* வெளிப்புறத்தில், அதிக வெப்பம் நிலவினாலும், அதனால் ஏவுகணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், உட்புறம் மிதமான வெப்பம் நிலவும் வகையிலான தொழில்நுட்பமும் இதில் உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி