காலியாக இருக்கும் பணியிடங்கள்: விரைந்து நிரப்ப ஸ்ரீதரன் யோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2014

காலியாக இருக்கும் பணியிடங்கள்: விரைந்து நிரப்ப ஸ்ரீதரன் யோசனை

ரயில்வே அமைச்சர், பா.ஜ.,வின் சுரேஷ் பிரபுவை, கடந்த வாரம் சந்தித்த, 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன், ரயில் திட்டங்கள் அதிகளவில் முடங்கிக் கிடப்பதற்கு காரணம், உயரதிகாரிகள் பணியிடங்கள் சரிவர நிரப்பப்படாததே என, தெரிவித்துள்ளார்.

ரயில்வே வாரியத்தின் உறுப்பினர்கள் அல்லது பொது மேலாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அதன் மூலம், திட்டங்களுக்கு தேவையான நிதியுதவி, டெண்டர் போன்றவற்றை மேற்கொள்ள முடியும் எனவும், ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அதுபோல, காலியாக இருக்கும் பொது மேலாளர் பொறுப்பை, மற்றொரு பொது மேலாளரை கொண்டு கவனிக்கச் செல்வதை கண்டித்துள்ள ஸ்ரீதரன், புதிதாக ஒரு நபரை தேர்ந்தெடுக்கும் வரை, அந்த பதவியிடத்தை காலி செய்யக் கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளார். எனவே, காலியாக இருக்கும் பணியிடங்களை, விரைந்து நிரப்ப வேண்டும் என, அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு, ஸ்ரீதரன், பரிந்துரை செய்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி