உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி நாளை மறுதினம் சென்னையில் நடைபெற உள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி 8 மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வரும் 16ம் தேதி சென்னையில் உள்ள ‘சீமாட்‘ கூட்ட அரங்கில் தொடங்கி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது.
அனைத்து உதவி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள், அறிவியல் மற்றும் மழலையர் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், இந்த பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.மொத்தம் 649 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வரும் ஜனவரி மாதம் 28ம் தேதியும், குமரி மாவட்டத்திற்கு ஜனவரி 29ம் தேதியும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி