68 பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை: கல்வியாளர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2014

68 பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை: கல்வியாளர்கள் அதிருப்தி


பத்துக்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை கொண்ட, 68 பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில்,
36 ஆயிரத்து 505 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, 14 வகையானநலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், இடைநிற்றல் தவிர்க்க கல்வி உதவித்தொகை, ஆங்கில வழிக்கல்வி, தொழில்நுட்ப வகுப்பு என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இருப்பினும், மாணவர்கள் சேர்க்கையில் பெரிதாக மாற்றம் ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.

இதன் காரணமாகவே, ஒவ்வொரு ஆண்டும் உபரி ஆசிரியர்களின் பட்டியல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாணவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், தொடக்ககல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 1,121 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 68 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இப்பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், "அரசு பள்ளிகளை மாணவர்கள்சேர்க்கை குறைவுக்கு காரணம், பள்ளிக் கல்வித்துறையே. பல்வேறு காரணங்கள் கூறி அரசு பள்ளிகளை மூடுதல், ஒருங்கிணைத்தல் ஏற்புடையதல்ல. மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, பள்ளிகளை மூட அனுமதிக்கக்கூடாது. இந்நிலை தொடரும் பட்சத்தில், வரும் காலங்களில் அரசு பள்ளிகளே இல்லாத நிலை ஏற்படும்" என்றார்.

இதுகுறித்து கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை பலமுறை அணுகியும் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டார்.

2 comments:

  1. ஆசிரியர் சங்கம் தன் கடமையை செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. KALVI THURAIKKU VAALTHUKKAL.10 KKU KURAIVAANA maanaver ennikkai palligalai pakkathu PALLIGALODU INAIKKUM POTHU (ARRANGE VEHICLE LIKE AUTO OR VAN) MAANAVER SAMUTHAYETHIYUM,PALA LATCHE PANATTHIYUM SAMIKKALAME?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி