அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும்மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளின் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தமிழக அளவிலான வேலைவாய்ப்பு முகாமை அண்ணாபல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.2015-ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23-ஆம் தேதி தொடங்கி திருநெல்வேலி மண்டலம், கோவை மண்டலம், சென்னை மண்டலம் என மூன்று மண்டலங்களிலும் 2015 ஜனவரி மாதம் வரை தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்களிடம் பதிவுக் கட்டணமாக ரூ. 750 வசூல் செய்து, அந்தத் தொகை அனைத்தையும் ஒரே வரைவோலையாக எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் கல்லூரி முதல்வர்களை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பத்தாம் வகுப்பு முதல் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கத் தகுதியுள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்தெந்த மண்டலங்களில் எந்தெந்த நாள்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்ற விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி