கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக அமலாகவில்லை: கல்வியாளர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2014

கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக அமலாகவில்லை: கல்வியாளர்கள்


தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கல்வி உரிமைச் சட்டம்முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கல்விக்கான தேசிய கூட்டணியின் அமைப்பாளர் ரமா காந்த் தேசாய் கூறியது:கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தி 5 ஆண்டுகள் ஆனாலும் அதில் பல்வேறு அம்சங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை இந்தச் சட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முறையாக அமைக்கப்படவில்லை. குறிப்பாக, இந்தச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளின் ஒரு கிலோமீட்டர், 3 கிலோமீட்டர்சுற்றளவுக்குள் உள்ள பகுதிகள் எவை என உள்ளாட்சி அமைப்புகள் வரையறை செய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அது செய்யப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி