அரசு பள்ளி மாணவியரின் ஆய்வு கட்டுரை; தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

அரசு பள்ளி மாணவியரின் ஆய்வு கட்டுரை; தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு

கோவை : 'காலநிலை மற்றும் பருவநிலை மாற்றங்களால் பரவும் நோய்கள்' குறித்து, கள ஆய்வில் ஈடுபட்ட, கோவை ஒண்டிபுதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் ஆய்வுக்கட்டுரை, தேசிய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு பெற்றுள்ளது.


மாவட்ட அளவில் நடந்த, அறிவியல் மாநாட்டில் கோவையில், 210 பள்ளிகள் பங்கேற்றன. இதில், சி.எம்.எஸ்., எஸ்.பி..., உட்பட 6 தனியார் பள்ளி மற்றும் ஒண்டிபுதுார் அரசு பெண்கள் பள்ளி என ஏழு ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்து, மாநில மாநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.கடந்த வாரம் புதுக்கோட்டையில் மாநில மாநாடு நடந்தது. இம்மாநாட்டில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 253 ஆய்வு கட்டுரைகள் பல்வேறு பள்ளி மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. கோவையிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட ஏழு ஆய்வு கட்டுரைகளில், ஒண்டிபுதுார் அரசு பள்ளி மாணவிகளின் கட்டுரை தேசிய அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு பெற்றுள்ளது. தேசிய அறிவியல் மாநாடு, டிச., 26 முதல் பெங்களூருவில் நடக்கிறது. கோவை ஒண்டிபுதுார் அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், ஜெரினா பர்வீன், இந்துமதி, சொப்னா, காவ்யாபிரியா, பூங்கோதை, இம்மாநாட்டில் தங்கள் ஆய்வுக்கட்டுரை குறித்து விளக்க உள்ளனர்.

ஆய்வுக்கட்டுரை குறித்து மாணவி ஜெரினா பர்வீன் கூறியதாவது:பருவநிலை மாற்றம் குறித்தும் நோய்கள் தாக்கம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. இதன் காரணமாகவே, இந்த ஆய்வுக்கட்டுரையை தேர்வு செய்தோம். சென்னை வானிலை மையத்தை அணுகி, 10 ஆண்டுகள் பருவநிலை மாற்றங்கள் குறித்து தகவல்கள் சேகரித்தோம். அதே சமயம், அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த காலகட்டங்களில் குறிப்பிட்ட நோய் தாக்குதல் உள்ளது என்பதை ஆய்வு செய்தோம்.

மூன்று மாதங்கள் தொடர்ந்த ஆய்வின் முடிவில், பருவநிலை மாற்றங்களின் போது விழிப்புணர்வு இல்லாமை காரணமாகவே பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், டெங்கு போன்ற பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவதை உணர்ந்தோம். காய்ச்சலின் அறிகுறிகள், பரவும் தன்மை, சிகிச்சை அனைத்தும் ஆய்வு செய்து, இதுவரை, 1000 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். மேலும், 10 ஆயிரம் பேரை நேரடியாக சந்திக்கவுள்ளோம்.ஆய்வு முடிவில், வெப்பத்தின் அளவு 0- 0.2 வரை, கடந்த, 10 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதும், மழையளவு வெகுவாக குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். எங்களின் ஆய்வுக்கு உதவிய தலைமையாசிரியை பாக்கியம் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் நடேசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு, ஜெரினா பர்வீன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி