பள்ளிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் கல்வித்துறை அலட்சியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

பள்ளிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் கல்வித்துறை அலட்சியம்

 பள்ளிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் கல்வித்துறை அலட்சியம் காட்டுவதாக, ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கான தகவல், மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி குறித்த அறிவிப்பு, -மெயில் மற்றும் தபால் வழியாக கல்வித்துறை அறிவிக்கிறது
மாநில கல்வித்துறையில் இருந்து மாவட்டம் மற்றும் உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, கல்வித்துறை தரப்பில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. நடுநிலை முதல் மேல்நிலை வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதியிருப்பதால், -மெயில் வழியாகவும், அவ்வசதி இல்லாத பள்ளிகளில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாகவும் தகவல் அறிவிக்கப்படுகிறது.ஆனால், துவக்கப்பள்ளிகளில் -மெயில் தகவல் பரிமாற்றத்துக்கான வசதி இல்லை. தபால் மூலமாகவோ அல்லது உதவித்தொடக்கக் கல்வி அலுவலகம் சென்றோ, தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இதனால், ஆசிரியர் கூட்டம், மாணவர்களுக்கான போட்டி குறித்த தகவல்கள், துவக்கப்பள்ளிகளுக்கு தாமதமாக வந்தடைகிறது. குறுகிய அவகாசத்தில் மாணவர்களை போட்டிக்கு தயார்படுத்த, ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்; மாணவர்களும் திணறுகின்றனர். இதனால், வகுப்பில் ஓரிருவர் மட்டுமே, போட்டிகளில்பங்கேற்கும் நிலை உருவாகிறது. மற்ற மாணவர்கள், திறமையிருந்தும் அவகாசமின்றி, தயாராவதில் சிக்கில் ஏற்படுகிறது.
கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கல்வித்துறையில் இருந்து தகவல் வந்ததும், அவற்றை பள்ளிகளுக்கு -மெயில் மற்றும் தபால் மூலமாக உடனடியாக அனுப்புகிறோம். முக்கியமான தகவல் எனில், மொபைல்போனில் தெரிவிக்கிறோம்,' என்றனர்.


2 comments:

  1. இந்த ஆண்டில் இனி ஆசிரியர் இடமாற்றம் கிடையாது: பள்ளிக் கல்வித்துறை
    சென்னை: மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டில் இனி ஆசிரியர் இடமாற்றம் கிடையாது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி