ஐகோர்ட் தீர்ப்பை மதிக்காத பள்ளிகள்: காஷ்மீரில் கட்டாய கட்டண வசூல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

ஐகோர்ட் தீர்ப்பை மதிக்காத பள்ளிகள்: காஷ்மீரில் கட்டாய கட்டண வசூல்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், செப்டம்பரில் பெய்த கனமழையால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.இதையடுத்து, காஷ்மீரில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து,
அம்மாநில ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், 'மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள பள்ளிகள், அங்கு பயிலும் மாணவர்களிடம், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டது. எனினும், சில பள்ளிகள் ஐகோர்ட் உத்தரவை மதிக்காமல், மாணவர்களிடம் கட்டாய கட்டண வசூலில் இறங்கியுள்ளதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சில பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், 'எங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாங்கள் தான் ஊதியம் வழங்க வேண்டும். அவர்களுக்கு ஊதியம் வழங்கவே, மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். எங்களுக்கு ஐகோர்ட்டிலிருந்து ஆணையோ, நோட்டீசோ கிடைக்கவில்லை' என்றனர். இதனிடையே, இந்த புகார் தொடர்பாக, விரைந்து விசாரிக்கப்படும் என, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. தீர்ப்பை மதிக்காத அரசு அதிகாரிளுக்கு???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி