விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு: விண்ணப்ப விநியோகம் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

விஐடி பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பப் படிவங்களின் விற்பனை நாடு முழுவதும் உள்ள 232 முக்கிய தபால் நிலையங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.

விஐடியில் வரும் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஏப்ரலில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடக்க நிகழ்ச்சி வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சரவணன், மாணவர் சேர்க்கை இயக்குநர் மணிவண்ணன், சீனியர் போஸ்ட் மாஸ்டர் ஷீபா செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நுழைவுத் தேர்வு: இப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை கணினி முறையில் நாட்டில் உள்ள 112 முக்கிய நகரங்கள், துபை, குவைத்தில் நடைபெறுகின்றன.

விண்ணப்பங்கள் பெறும் வழிகள்: தபால் நிலையங்கள் மூலமும், இணைய வழி மூலமும் நுழைவுத் தேர்வு விண்ணப்பப் படிவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் ரூ.990-ஐ விஐடியில் நேரில் செலுத்தி விண்ணப்பத்தைப் பெறலாம். ரூ.990 மதிப்புக்கு விஐடி யுனிவர்சிட்டி, வேலூர் என்ற முகவரிக்கு கேட்பு காசோலை மூலமும் விஐடி வேலூர் வளாகம், சென்னை வளாகத்தில் விண்ணப்பங்கள் பெறலாம். இணைய வழி மூலம் விண்ணப்பங்களைப் பெற ரூ.940-ஐ செலுத்தி www.vit.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2015 பிப்ரவரி 27-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி