பெரியார் பல்கலையில், வெற்று விடைத்தாள் கொள்முதல் செய்ததில், பெரும் ஊழல் நடந்துள்ளதாக, பல்கலை ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர்.
சேலம், பெரியார் பல்கலையில், 80க்கும் மேற்பட்ட இணைவு பெற்ற கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 'செமஸ்டர்' தேர்வுகளுக்கான கேள்வித்தாள், மற்றும் வெற்று விடைத்தாள், பல்கலையால் கொள்முதல் செய்யப்பட்டு, தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு, 'செமஸ்டர்' தேர்வுக்கு, 9 லட்சம் விடைத்தாள்கள் தேவைப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை, 40 பக்கம் கொண்ட விடைத்தாள், 6.35 ரூபாய்க்கு, கொள்முதல் செய்யப்பட்டது. துணைவேந்தராக, சுவாமிநாதன் பொறுப்பேற்ற பின், விடைத்தாளில், சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாளை, கொள்முதல் செய்ய முடிவு செய்தார். இதன்படி, மதுரையில் உள்ள ஒரு கம்பெனிக்கு, இரண்டு செமஸ்டருக்கான விடைத்தாள் கொள்முதலுக்கு, ஆணை வழங்கப்பட்டது. இதில் ஒரு விடைத்தாளுக்கு, 20.35 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மூன்று மடங்குக்கும் அதிகமாக விலை கொடுத்து விடைத்தாள் வாங்கியதால், பல்கலையின் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதாகவும், இதில், பெரும் அளவிற்கு, ஊழல் நடந்திருப்பதாகவும், பல்கலை ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த தேர்வில், 6.35 ரூபாய்க்கு வாங்கிய விடைத்தாள், லட்சக்கணக்கில் தேங்கியுள்ளது. முந்தைய அளவு பக்கங்கள் கொண்ட அதே விடைத்தாள், தற்போது, 20.35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 10 ரூபாய்க்கு அச்சடித்து தர, பல நிறுவனங்கள் தயாராக இருந்தும், அதிக விலை கொடுத்து வாங்கியதில், பல லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது.
பல்கலை ஆசிரியர்கள் ஆர்டர் கிடைக்காதவர்கள், அதிக விலைக்கு வாங்கியது குறித்து, குறை கூறலாம்.
சுவாமிநாதன் துணைவேந்தர்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி