பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தாயார் பெயர் பதிவு கட்டாயம்: அரசு தேர்வுத்துறை புதுஉத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2014

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தாயார் பெயர் பதிவு கட்டாயம்: அரசு தேர்வுத்துறை புதுஉத்தரவு

'பிளஸ் 2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை பதியும் போது தந்தை பெயருடன், தாய் பெயரையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என, அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களில் உள்ள பள்ளி வாரியாக எழுத உள்ளோர் விபரங்களை தேர்வுத்துறையின் தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு அதற்கான சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. தந்தை பெயருடன், தாய் பெயரையும் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவால், மாணவரின் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பாடம், மீடியம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களுடன் தாய் பெயரும் சேர்த்து புகைப்படத்துடன் ஆப்-லைனில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதன் விபரங்களை 'சிடி'யில் பதிவு செய்து நாளை(டிச.,8க்குள்) மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரின்ட் அவுட் எடுத்து வகுப்பறைகளில் ஒட்டி மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும், அதில் திருத்தம் இருந்தால் திருத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பொதுத்தேர்வு எழுதும் மாணவரின் பெயருடன் தந்தை பெயர் மட்டுமே பதிவு செய்யப்படும். ஒரு சில மாணவர்களின் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒன்றாக இருக்கும்போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும், சட்டரீதியாக தந்தை விவாகரத்து பெற்று பிரிந்த பின் தாயிடம் மாணவர் வளர்ந்தால் அதனடிப்படையில் தாய் பெயரை பதிவு செய்யவும் இந்தமுறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாணவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகொண்டுவர வேண்டும். ஆனால் அது கட்டாயமில்லை. இன்ஷியலில் தாய் பெயரை சேர்ப்பதற்கான அரசாணை ஏற்கனவே உள்ளது,”என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி